சீக்கிரமா படத்தை ரிலீஸ் பண்ணுங்க... லிஸ்ட்டில் சேர்ந்த இந்தி ரசிகர்கள்!

மும்பை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வலிமை படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து தொடர் காத்திருப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்த லிஸ்ட்டில் தற்போது இந்தி ரசிகர்களும் இணைந்துள்ளனர்.

வலிமை படம்

வலிமை படம்

கடந்த 2019ல் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் அஜித், ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வலிமை. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அதிகமான ஆக்ஷன் காட்சிகள்

அதிகமான ஆக்ஷன் காட்சிகள்

அஜித்தின் அதிகமான ஆக்ஷன் காட்சிகளுடன் படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு ரசிகர்கள் இதை அறிந்துள்ளனர். அஜித் கடந்த படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இல்லாத நிலையில் தற்போது வலிமை படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்திற்காக சிறப்பு திரைக்கதை

அஜித்திற்காக சிறப்பு திரைக்கதை

படத்தில் அஜித்துடன் ஹுமா குரோஷி, கார்த்திகேயா, மனோபாலா, சுமித்ரா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படம் அஜித்தின் 60வது படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் திரைக்கதையை அஜித்திற்காக மற்றும் அவரது ரசிகர்களுக்காக மிகவும் கவனமுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ரேஸ் காட்சிகள்

ரேஸ் காட்சிகள்

முன்னதாக அவர் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம் சிறப்பான த்ரில்லர் படமாக இருந்தது. அந்தப் படத்தின் அனுபவத்தை தற்போது வலிமை படமும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் அஜித்திற்காக வாகன ரேஸ் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

ரிலீஸ் தேதிக்கு காத்திருப்பு

ரிலீஸ் தேதிக்கு காத்திருப்பு

கடந்த தீபாவளிக்கே வலிமை படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆயினும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை முறையாக வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலிவுட் ரசிகர்கள்

பாலிவுட் ரசிகர்கள்

அஜித் பாலிவுட்டிலும் நேரடியாக நடித்து அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். இதனிடையே, இந்தி ரசிகர்களும் இந்தப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். இதுகுறித்து We want Valimai என்பது உள்ளிட்ட போஸ்டர்களை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வரவேற்பை பெற்ற பாடல்கள்

வரவேற்பை பெற்ற பாடல்கள்

படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இன்னும் ஓரிரு தினங்களில் படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கென அஜித் ரசிகர்கள் தொடர் காத்திருப்பில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X