மாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, மாஸ்டர்.. தமிழ்ப் படங்களின் இந்தி ரீமேக்கிற்கு கடும் போட்டி!
சென்னை: இந்தியில் ரீமேக் ஆகும் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு மொழியிலும் ஹிட்டான படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கமானதுதான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிப் படங்கள் அவ்வப்போது மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு எடுக்கப்படும்.

கோலமாவு கோகிலா
சமீபகாலமாக தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் ஆகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழில் நயன்தாரா நடித்து வரவேற்பை பெற்ற கோலமாவு கோகிலா என்ற படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதை நெல்சன் இயக்கி இருந்தார். இது இந்தியில், குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் உருவாகிறது.

அஜய் தேவ்கன்
நயன்தாரா நடித்த கேரக்டரில் ஜான்வி கபூர் நடிக்கிறார். இதை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தயாரித்து வருகிறார். சித்தார்த் சென்குப்தா இயக்குகிறார். பஞ்சாப்பில் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதையடுத்து கார்த்தி நடித்த கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க இருக்கிறார்.

ஜான் ஆபிரகாம்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம், இந்தியில் மும்பைகர் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதை சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அஜித் நடித்த வேதாளம் படத்தின் இந்தி ரீமேக்கில், ஜான் ஆபிரகாம் நடிக்க இருக்கிறார்

விக்ரம் வேதா
மாதவன், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதற்கிடையே சமீபத்தில் வெளியாகி இருக்கிற, விஜய்யின் மாஸ்டர் படமும் ரீமேக் ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ரீமேக் லிஸ்ட்!
ஏற்கனவே ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா படம் லட்சுமி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் அக்ஷய் குமார் நடித்திருந்தார். ஓடிடியில் வெளியாகி இந்தப் படம் வரவேற்பைப் பெற்ற நிலையில், மேலும் சில படங்கள் இந்தி ரீமேக் லிஸ்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











