சென்னையை விட ஷிமோகாவில் வெறித்தனம் காட்டிய ரசிகர்கள்.. விஜய்க்காக கிரேனில் வந்த பிரம்மாண்ட மாலை

கர்நாடகா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடகாவில் உள்ள ஷிமோகா எனும் இடத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டு நடிகரான விஜய்க்கு ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவிலும் ரசிகர்கள் அதிகம்.

விஜய்யின் வருகையை அறிந்த ஷிமோகா ரசிகர்கள், பிரம்மாண்ட மலர் மாலையை கிரேனில் தூக்கி வந்து விஜய்க்கு சமர்பிக்க காத்திருந்தனர். இந்த தகவலை அறிந்த நடிகர் விஜய் அந்த மாலையை ஏற்றுக் கொண்டுள்ளார்.

தளபதி 64

தளபதி 64

மாநகரம், கைதி படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கி வரும் படம் தளபதி 64. இந்த படத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, வி.ஜே. ரம்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 2020ம் ஆண்டு கோடை விடுமுறை கொண்டாட்டமாக ‘தளபதி 64' படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கே போனாலும் கூட்டம்

எங்கே போனாலும் கூட்டம்

சென்னையைத் தொடர்ந்து டெல்லியில் விஜய்யின் ‘தளபதி 64' ஷூட்டிங் நடைபெற்றது. அங்கும் விஜய் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று நடிகர் விஜய்யை நேரில் கண்டு ரசித்தனர். மேலும், விஜய்யின் தளபதி 64 லுக்கும் இணையத்தில் கசிந்து வைரலானது.

பிரம்மாண்ட மாலை

தலைவர்களின் சிலைகளுக்கு பொதுவாக பிரம்மாண்ட மாலைகள் அணிவிக்கப்படும். ஆனால், அதை விடவும் பெரிய அளவிலான மலர் மாலை நடிகர் விஜய்க்காக தயார் செய்யப்பட்டு, அதனை ஆட்கள் தூக்கி வராமல், கிரேனை வைத்து எடுத்து வந்து விஜய்யின் தரிசனத்திற்காக ஷிமோகா விஜய் ரசிகர்கள் காத்துக் கிடந்தனர்.

தளபதி கிரேஸ்

விஜய்க்காக வரவழைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட மாலையை மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கண்டு வியந்தனர். இப்படியொரு விஷயத்தை தனது ரசிகர்கள் செய்து வருவதை அறிந்த நடிகர் விஜய் அந்த மாலையை மனதார ஏற்றுக் கொண்டார்.

ஹோட்டல் முன் கூட்டம்

நடிகர் விஜய் மற்றும் தளபதி 64 படக்குழுவினர் தங்கியுள்ள ஹோட்டல் முன்பு பெருந்திரளான கூட்டம் கூடி தினமும் விஜய்யின் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். ஹோட்டலை விட்டு காலையில் ஷூட்டிங்கிற்காக செல்லும் முன், ரசிகர்களை சந்தித்து புன்னகையும் கையசைத்து உற்சாகப்படுத்தி வருகிறார் நடிகர் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X