லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்துக்காக.. அண்ணாச்சி வீட்டில் அமர்க்கள செட்.. பாடல் காட்சிகள் ஃபாரினில்!

By

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடிக்கும் படத்துக்காக, அவரது வீட்டில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது.

லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன், விளம்பர படங்களில் நடித்து வந்தார். இப்போது சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அவர் நடிக்கும் படத்தை இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இணைந்து இயக்குகின்றனர். இவர்கள் உல்லாசம், விசில் படங்களை இயக்கியவர்கள்.

யோகி பாபு

யோகி பாபு

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சரவணன் ஜோடியாக, கீத்திகா திவாரி எனும் மாடல் நடிக்கிறார். மற்றும் பிரபு, விவேக் உட்பட பலர் நடிக்கின்றனர். காமெடி நடிகர் யோகி பாபுவும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவர் சரவணனின் நண்பராக படத்தில் வருகிறார்.

ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம்

சரவணன் அருள் பெயரில், கடந்த சில மாதங்களுக்கு முன் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டன. உழைப்பின் கதாநாயகன் அருள் சரவணன் மாநில தலைமை ரசிகர் மன்றம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மன்றத்தின் போஸ்டர்கள் சென்னையில் பரபரப்பாக ஒட்டப் பட்டிருந்தன. இந்நிலையில், படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

ரூ.10 கோடி செலவில்

ரூ.10 கோடி செலவில்

இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் லெஜண்ட் சரவணன், கீத்திகா திவாரி பங்கேற்று நடித்தனர். இதற்காக ரூ.10 கோடி செலவில் அரண்மனை அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்துக்காக பிரமாண்ட லேப் செட் அமைத்து ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அனல் அரசு மாஸ்டர் இதை இயக்கினார்.

பிரமாண்ட செட்

பிரமாண்ட செட்

இந்நிலையில் இந்த படத்துக்காக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சரவணனின் வீட்டில் பிரமாண்ட செட் அமைக்கப்படுகிறது. அங்கு விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதுவரை 40 சதவிகித படம் முடிவடைந்துவிட்டது என்றும் இன்னும் சில மாதங்களில் மொத்த படமும் முடிந்துவிடும் என்றும் பாடல் காட்சிக்கு வெளிநாடு செல்ல இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Read more about: saravanan arul
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X