Jailer - பட்டத்த பறிக்க நூறு பேரு.. அந்த வரி விஜய்க்காகத்தான் எழுதியதா?.. உறுதி செய்த பாடலாசிரியர்

சென்னை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு செய்த செய்கை பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கோலிவுட் எங்கும் ஜெயிலர் ஃபீவர்தான் அடித்துக்கொண்டிருக்கிறது. நெல்சன் திலீப்குமாரு, ரஜினிகாந்த்தும் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கின்றனர். இன்னும் ஆறு நாட்களில் படம் பான் இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அமெரிக்காவில் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டிவருவதாக ஒருபக்கம் தகவல் வெளியாக படத்தை பார்த்த அனிருத் இங்கு ஃபயர் விட்டிருக்கிறார். இதனால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Hukum Lyricist Super Subbu Confirmed Taking Dig At Thalapathy Vijay At Jailer Audio Launch

பஞ்சாயத்து: ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்றால் எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு நிகழத்தான் செய்யும். இந்த முறை அது கொஞ்சம் கூடவேத்தான் இருக்கிறது. அதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்து. தமிழ் சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான் என்கிற பிம்பம் பல வருடங்களாகவே இருக்கிறது. அதனை மற்ற ஹீரோக்களும் ஒத்துக்கொண்டுதான் இத்தனை ஆண்டுகளும் இருந்தார்கள்.

அடுத்த சூப்பர் ஸ்டார்: ஆனால் ரஜினி வரிசையாக இரண்டு படங்களில் தோல்வி அடைந்துவிட்டார். வசூலும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை; சம்பளமும் குறைந்துவிட்டது. அதேசமயம் விஜய்யோ சம்பளத்தில் 150 கோடி ரூபாயை தாண்டிவிட்டார்; அவரது படங்கள் அசால்ட்டாக 100 கோடி ரூபாயை வசூலில் அள்ளுகின்றன. எனவே அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பேச ஆரம்பித்து பஞ்சாயத்தில் அனலை கூட்டினர் விஜய் ரசிகர்கள்.

Hukum Lyricist Super Subbu Confirmed Taking Dig At Thalapathy Vijay At Jailer Audio Launch

ஜெயிலர் பாடல்: இப்படிப்பட்ட சூழலில்தான் ஜெயிலர் படத்திலிருந்து ஹுக்கும் என்ற பாடல் வெளியானது. பாடலில், "தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா; தலைமுறை கடந்து ஹிட்டானவன்; உன் அலும்ப பார்த்தவன் உங்கொப்பன் விசில கேட்டவன் உன் மவன் பேரன ஆட்டம் போட வைப்பவன்; பேரை தூக்க நாலு பேரு பட்டத்தை பறிக்க நூறு பேரு குட்டிச்செவுத்தை எட்டிப்பார்த்தா உசர கொடுக்க கோடி பேரு" என்ற வரிகள் இடம்பெற்றன. இதன்மூலம் ரஜினிதான் ஒரே சூப்பர் ஸ்டார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று இங்கு யாரும் இல்லை. விஜய்க்கு ரஜினிகாந்த் பதிலடி கொடுத்துவிட்டார் என பேச்சு கிளம்பியது.

பாராட்டிய ரஜினிகாந்த்: விவகாரம் புகைந்துகொண்டிருந்த சமயத்தில் அந்த வரிகளை எழுதிய சூப்பர் சுப்புவை ரஜினி பாராட்டியதும், ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி கூறிய காக்கா கழுகு கதை மேலும் இந்த விஷயத்தை ஹாட் டாபிக்காக மாற்றியது. மேலும் இவை அனைத்துக்கும் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பதிலடி கொடுப்பார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Hukum Lyricist Super Subbu Confirmed Taking Dig At Thalapathy Vijay At Jailer Audio Launch

பாடலாசிரியரின் செய்கை: இந்நிலையில் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹுக்கும் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது பாடலை எழுதிய சூப்பர் சுப்பு செய்த ஒரு செய்கை இணையத்தில் தீயாக பரவிவருகிறது. அதாவது பட்டத்தை பறிக்க நூறு பேரு என்ற வரி வரும்போது, விஜய்யின் ட்ரேட் மார்க் ஸ்டெப்பான இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி தலையை ஆட்டும் ஸ்டெப்பை அமர்ந்தபடியே சுப்பு போட்டார்.

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அந்த வரி வரும்போது ஏன் இந்த ஸ்டெப்பை போடணும். அப்போ பட்டத்த பறிக்க நூறு பேரு என விஜய்யை மனதில் வைத்துதான் எழுதினேன் என்பதை இதன் மூலம் சூப்பர் சுப்பு உறுதிப்படுத்திவிட்டாரா என கேள்வி எழுப்பி அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X