அரேபியன் குதிரை போல வாட்டசாட்டமாக நிற்கும் வலிமை ஹீரோயின்!
மும்பை : காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹூமா குரேஷி.
இப்பொழுது அஜீத்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மகாராணி பாராட்டுக்களைப் பெற்று வரும் நிலையில் அரேபியன் குதிரை மாதிரி தொடை அழகை காட்டி வாட்டசாட்டமாக நின்றுகொண்டு வெளியிட்டுள்ள கிளுகிளு போட்டோக்கள் ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.

சிறிய வேடத்தில்
பாலிவுட்டில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகை ஹூமா குரேஷி தமிழ் சினிமாவிற்கு காலா படத்தில் நடித்து அறிமுகமானார். கபாலி வெற்றிக்குப் பிறகு மீண்டும் பா. ரஞ்சித்,ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான காலா திரைப்படத்தில் ரஜினியின் காதலியாக ஹுமா குரேஷி சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் நேர்த்தியான நடிப்பில் தமிழ் ரசிகர்களின் மனதில் நின்றார்.

மகாராணி பாராட்டுக்களை
இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள பெல்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மகாராணி பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

ஒரே நேரத்தில் ரிலீஸ்
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வலிமை படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார். படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிறது. ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகாத நிலையில் இன்னும் ஓரிரு வாரத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் என இரண்டுமே ஒரே நேரத்தில் படக்குழு ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுட்டெரிக்கும் கவர்ச்சி
வலிமை ரிலீசுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கவர்ச்சி பொங்க வெளியிடும் பல புகைப்படங்கள் சமூக வலைதளத்தை சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில் இப்பொழுது அரேபியன் குதிரை போல வாட்டசாட்டமாக நின்றுகொண்டு வாழைத்தண்டு போல பளபளப்பாக இருக்கும் கால்கள் பீரங்கி போல கம்பீரமாக நிற்க முன்னணி நடிகைகளே அசந்து போகும் அளவிற்கு ஹியூமாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணைய தளத்தை ஹாட்டாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











