twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போன மாசம் ரூ.6 ஆயிரம், இப்ப 50 ஆயிரமா, எப்படிங்க இது? ரஜினி ஹீரோயினுக்கு ஷாக் கொடுத்த கரன்ட் பில்!

    By
    |

    மும்பை: மின் கட்டணம் கன்னா பின்னாவென்று அதிகரித்திருப்பதாக நடிகைகள் புகார் கூறிவந்த நிலையில், 'காலா' நடிகையும் இப்போது புகார் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    அரசை குறிவைத்த நடிகர் பிரசன்னா

    கொரோனாவுக்காக பிறப்பிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர்.

    வெளியே செல்லவேண்டாம் என்று அரசு உத்தரவிட்டதால், வீடுகளில் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது.

    உங்க வேலைய பாருங்க.. என் குடும்ப விஷயத்த பேசாதீங்க.. லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் எகிறிய வனிதா!உங்க வேலைய பாருங்க.. என் குடும்ப விஷயத்த பேசாதீங்க.. லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் எகிறிய வனிதா!

    மின் கட்டணம்

    மின் கட்டணம்

    சிலர் மூன்று மாதங்களாக வீட்டில் இருந்து வேலை செய்துவருவதும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் பலருக்கும் மின் கட்டணம் அதிகரித்துள்ளது. இதுபற்றி பொதுமக்கள் புகார் கூறி வந்த நிலையில் சினிமா பிரபலங்களும் மின் கட்டணம் கன்னா பின்னாவென்று வந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். முதலில் நடிகர் பிரசன்னா இதுபற்றி ட்விட்டரில் குறை கூறியிருந்தார்.

    மின்சார வாரியம்

    மின்சார வாரியம்

    மின்சார வாரியம்

    முறைகேடு நடக்கிறது

    முறைகேடு நடக்கிறது

    தங்களுக்கு வந்த கரன்ட் பில்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். இதில் ஏதோ முறைகேடு நடக்கிறது எனவும் குற்றம்சாட்டி இருந்தனர். நடிகை கார்த்திகா நாயருக்கு ஒரு லட்சம் ரூபாய் பில் வந்திருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகை ஷ்ரத்தா தாஸ், தனக்கு ரூ 26 ஆயிரம் வந்திருப்பதாகவும், அதானி நிறுவனம்தான் இதற்கு காரணம் என்றும் ட்வீட்டில் குறை கூறியிருந்தார்.

    நடிகை டாப்ஸி

    நடிகை டாப்ஸி

    இந்நிலையில், நடிகை டாப்ஸியும் தங்கள் வீட்டு மின் கட்டணம் ரூ. 36 ஆயிரம் ரூபாய் வந்திருப்பதாக அதிர்ச்சியுடன் தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு முறையான விளக்கத்தை மின்சாரத்துறை கொடுக்க வேண்டும் என்று டாப்ஸி கூறி இருந்தார். பல நெட்டிசன்கள், தங்களுக்கும் இதே நிலைமை தான் என கூறினர்.

    ஹூமா குரேஸி

    ஹூமா குரேஸி

    இந்நிலையில் பிரபல நடிகை ஹூமா குரேஸியும் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். 'இது என்ன புது மின் கட்டணம்? கடந்த மாதம் ரூ.6 ஆயிரம் கட்டினேன். இப்போது 50 ஆயிரமா? எப்படி வந்தது இந்த கட்டண உயர்வு? எங்களுக்கு விளக்குங்கள்' என்று அதானி மின் குழுமத்துக்கு டேக் செய்து அவர் கேட்டுள்ளார். இவர், தமிழில் காலா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ள இந்தி நடிகை.

    பிஜோய் நம்பியார்

    பிஜோய் நம்பியார்

    இதை ஏன் நீங்கள் மகாராஷ்ட்ரா முதல்வரிடம் தெரிவிக்கக் கூடாது? அவர்கள்தானே அதானி குழுமத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்று சில நெட்டிசன்கள் கேட்டுள்ளனர். இவரைப் போலவே டேவிட், சோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியாரும் அதிர்ச்சியோடு தனக்கு வந்துள்ள மின் கட்டணத்தைப் பகிர்ந்துள்ளார். மின் கட்டணம் மூன்று மடங்கு அதிகமாகி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

    English summary
    While celebrities including Prasanna, Karthika Nair and Taapsee Pannu have voiced against the matter on Twitter, 'Kaala' actress Huma Quresh is the latest to speak up about her electricity bill.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X