ஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்... சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த 'வலிமை' நாயகி

By

சென்னை: அஜித்தின் வலிமை படத்துக்காக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்துள்ளார், அந்தப் படத்தின் ஹீரோயின்.

அஜித்குமார், இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

'நேர்கொண்ட பார்வை' படத்தை அடுத்து ஹெச்.வினோத் இதை இயக்கி வருகிறார். நடிகை ஶ்ரீதேவியின் கணவரும் பிரபல இந்திப் பட தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார்.

காலா நாயகி

காலா நாயகி

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக, யாமி கவுதம் நடிக்கிறார் என்றும் இலியானா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின. இப்போது இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நடித்திருந்தார். இந்தியில் கேங்ஸ் ஆப் வாஸிபுர், டி டே, ஹைவே, ஜாலி எல்.எல்.பி, விக்டரி ஹவுஸ் உட்பட பல படங்களில் நடித்தவர்.

கார்த்திகேயா

கார்த்திகேயா

இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்தது. பின்னர் படக்குழு சென்னைத் திரும்பியது. அடுத்து சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரமாண்ட செட் போடப்பட்டு படமானது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இதற்கிடையே நவ்தீப் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆக்‌ஷன் விபத்து

ஆக்‌ஷன் விபத்து

இந்த படத்துக்காக, கடந்த சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளின்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. அப்போது இயக்குனர் உட்பட பலர் ஓய்வு எடுக்குமாறு கூறியும் மறுத்துவிட்ட அஜித், காயத்துடனேயே ஷூட்டிங்கில் கலந்துகொண்டு முடித்துக் கொடுத்தார் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

புல்லட் ஓட்டி பயிற்சி

புல்லட் ஓட்டி பயிற்சி

இந்நிலையில், படத்தில் ஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்காக நடிகை ஹூமா, புல்லட் ஓட்டி பயிற்சிப் பெற்றுள்ளார். சென்னையின் சில பகுதிகளில், ஹெல்மெட் அணிந்தபடி, அவர் புல்லட்டில் ரவுண்ட் அடித்துள்ளார். வலிமை படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வந்தது. கொரோனாவுக்காக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வலிமை படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X