இனியும் காத்திருக்க முடியாது.. ‘காலா’ காதலி வெளியிட்ட சூப்பர் போட்டோ!

தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஹூமா குரேஷி.

Recommended Video

'காலா' - 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்- வீடியோ

சென்னை: நடிகை ஹூமா குரேஷி காலா படப்பிடிப்பின் போது ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடித்துள்ள படம் காலா. வரும் ஜூன் 7ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

Huma Qureshi releases photo with superstar

இந்நிலையில், இப்படத்தில் இரண்டு நாயகிகளுள் ஒருவராக நடித்துள்ள ஹூமா குரேஷி தனது டிவிட்டர் பக்கத்தில் காலா படப்பிடிப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், அதில், 'இனிமேலும் இந்தப் புகைப்படத்தை வெளியிட காத்திருக்க முடியாது' என அவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் படத்தில், ரஜினியுடன் அவர் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போல் உள்ளது. இப்படத்தில் மும்பை தாதாவாக ரஜினி நடித்துள்ளார். எனவே படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அவர் கருப்பு சட்டை மற்றும் கருப்பு வேட்டி அணிந்தே வருகிறார். ஆனால், இப்புகைப்படத்தில் அவர் கருநீல சபாரி சூட் அணிந்திருக்கிறார்.

காலாவில் ரஜினியின் மனைவியாக நடிகை ஈஸ்வரிராவ் நடித்துள்ளார். காலாவின் காதலியாக ஹூமா வருகிறார். எனவே, இக்காட்சி பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X