அஜித் ஹீரோயின் கையில் ஆஸ்கர்..முதுமலை யானைகள் ஆவணப் படத்தை தயாரித்த குனீத் மோங்கா கொடுத்த லிப் லாக்!
மும்பை: The Elephant Whisperers ஆவண குறும்படத்தை தயாரித்த குனீத் மோங்கா தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த புகைப்படத்தை அஜித் பட ஹீரோயின் ஷேர் செய்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
95வது ஆஸ்கர் விழா மார்ச் 12ம் தேதி அமெரிக்காவில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்திய தயாரிப்பில் வெளியான The Elephant Whisperers ஆவண குறும்படத்திற்கும் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது.

ஆஸ்கரில் அசத்திய இந்தியா
இந்திய திரைப்படங்கள் ஆஸ்கர் நாமினேஷனுக்கு அனுப்பப்படுவதும் பின்பு கடைசி நேரத்தில் நாமினேட் ஆகாமல் தோல்வியை தழுவுவதுமாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடம் கிடைக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு ஒன்றுக்கு இரண்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்று இந்தியா சரித்திர சாதனையை படைத்துள்ளது.

தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் தயாரிப்பாளர்
சே சலாம் இந்தியா, லஞ்ச் பாக்ஸ், சைத்தான், கேங்ஸ் ஆஃப் வாசுப்பூர், சூரரைப் போற்று (இணை தயாரிப்பு) மற்றும் ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் உள்ளிட்ட பல சிறந்த படங்களை தயாரித்துள்ளார் குனீத் மோங்கா. ஆஸ்கர் விருது விழாவில் இந்திய பாரம்பரிய உடையான சேலையை அணிந்து கொண்டு அந்த படத்தின் இயக்குநர் கார்த்திகி உடன் விருது பெற்ற தருணம் ஒட்டுமொத்த இந்தியர்களாலும் கொண்டாடப்பட்டது.

அஜித் ஹீரோயின் கையில் ஆஸ்கர்
இந்தியா திரும்பிய குனீத் மோங்காவுக்கு அவரது தோழியான பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி உற்சாக வரவேற்பு அளித்துள்ளார். அஜித்தின் துணிவு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ஹூமா குரேஷி குனீத் மோங்காவின் ஆஸ்கர் விருதினை தனது கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்து வீடியோவையே வெளியிட்டுள்ளார். மேலும், சீக்கிரமே தானும் தனது நடிப்புத் திறமையால் ஒரு ஆஸ்கர் வெல்ல விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கணவருக்கு லிப் லாக்
தயாரிப்பாளர் குனீத் மோங்கா தனது கணவர் சன்னி கபூருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த மகிழ்ச்சியான தருணத்தையும் போட்டோவாக எடுத்து ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கையில் ஆஸ்கர் உடன் கணவருக்கு குனீத் மோங்கா லிப் லாக் கிஸ் அடித்த புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











