பேட்டி கொடுக்காவிட்டால் பெயரை கெடுப்பீங்களா?: பொங்கிய 'காலா' நடிகை

By Siva

மும்பை: தன்னை பற்றி தரக்குறைவாக செய்தி வெளியிட்ட இணையதளத்தை விளாசியுள்ளார் நடிகை ஹூமா குரேஷி.

டைகர் ஷ்ராஃப் நடித்த ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படம் திரையுலக பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அந்த படத்தை பார்க்க வந்த இடத்தில் நடிகர் சல்மானின் கானின் தம்பி சொஹைல் கானும், அவரின் மனைவி சீமாவும் நடிகை ஹூமா குரேஷியை பார்த்தும், பார்க்காதது போன்று சென்றனர் என்று ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டது.

Huma Qureshi slams a portal

அந்த செய்தியை பார்த்த ஹூமா குரேஷி கோபம் அடைந்து ட்விட்டரில் பொறிந்து தள்ளிவிட்டார்.

இது பற்றி அவர் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,

இந்த செய்திக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். உங்களை போன்ற முட்டாள்களை நடிகர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் பயந்துவிட்டோம் என்று நினைப்பதா?. இல்லவே இல்லை.

உங்கள் இணையதளத்திற்கு பேட்டி தர மறுத்ததால் இப்படி எழுதுவதா...என்ன தைரியம் இருந்தால் என் பெயரை கெடுப்பீர்கள் என்று விளாசியுள்ளார் ஹூமா.

ஹூமாவுக்கும், சொஹைல் கானுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. அதை ஹூமா திட்டவட்டமாக மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X