வாரேவா.. வலிமை ஹீரோயினின் அந்த மனசு.. 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மருத்துவமனை ரெடியாகுது!

சென்னை: தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தலைநகர் டெல்லியில் 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக கொரோனா சிகிச்சை மருத்துவமனையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் கொரோனாவால் நாள் தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.

மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், படுக்கை வசதி கிடைக்காமலே நூற்றுக் கணக்கான நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பரிதவிக்கும் மக்கள்

பரிதவிக்கும் மக்கள்

கொரோனா இரண்டாம் அலையை சமாளிக்க முடியாமல் இந்திய மக்கள் திணறி வருகின்றனர். குடும்பம் குடும்பமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளை தேடி வருகின்றனர். ஆக்ஸிஜன் மற்றும் படுக்கையறை பற்றாக்குறையால் நிகழும் மரணங்களால் மயானங்களும் நிரம்பி வழிகின்றன.

100 படுக்கைகளுடன்

100 படுக்கைகளுடன்

இந்நிலையில், டெல்லி மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் Save the Children எனும் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மருத்துவமனையை உருவாக்கும் பணியில் நடிகை ஹூமா குரேஷி இணைந்துள்ளார்.

காலா காதலி

காலா காதலி

பிரபல பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி தமிழில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான காலா படத்தில் அவரின் காதலியாக நடித்து கலக்கி இருப்பார். ஹூமா குரேஷியின் இந்த செயல்பாடு ரசிகர்களையும் பிரபலங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

வலிமை ஹீரோயின்

வலிமை ஹீரோயின்

மேலும், ஹூமா குரேஷி தான் தல அஜித்தின் வலிமை படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹூமா குரேஷியின் இந்த அற்புதமான முன்னெடுப்பிற்கு ஏகப்பட்ட தல ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜாக் ஸ்னைடர்

ஜாக் ஸ்னைடர்

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜாக் ஸ்னைடரின் ஆர்மி ஆஃப் தி டெட் எனும் திரைப்படத்தில் நடித்துள்ள ஹூமா குரேஷி இந்த முயற்சியை முன்னெடுத்துள்ள நிலையில், இயக்குநர் ஜாக் ஸ்னைடரும் தன்னை இதில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் மேலும், ஹாலிவுட் நடிகர் ஹக் ஜேக்மேன் உள்ளிட்ட பலரும் Save the Children தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த தற்காலிக மருத்துவமனையை உருவாக்க நிதி வழங்கி வருகின்றனர்.

ஆக்ஸிஜன் பிளான்ட்

ஆக்ஸிஜன் பிளான்ட்

மேலும், அந்த தற்காலிக மருத்துவமனையில் ஆக்ஸிஜனை உருவாக்கும் பிளான்டையும் நிர்மானிக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக நடிகை ஹூமா குரேஷி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதே போல வீட்டில் இருந்தே கொரோனா சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கும் உதவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X