சண்டை காட்சி எல்லாம் ‘அவுட் ஆஃப் தி வேர்ல்ட்’ இருக்கும்.. ஹூமா குரேஷி சொன்ன வலிமை சீக்ரெட்ஸ்!

சென்னை: வலிமை படத்தின் புரமோஷனை பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பித்துள்ளார் நடிகை ஹூமா குரேஷி.

சமீபத்தில் வட இந்தியா மீடியா ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி அஜித் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

தான் ஒரு மிகப்பெரிய அஜித் ரசிகை என்றும் வலிமை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே தனக்கு மிகப்பெரிய வரம் என்றும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கூறியுள்ளார்.

வலிமை வருது

வலிமை வருது

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என 2019ம் ஆண்டு அஜித் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த நடிகர் அஜித் குமார் அதன் பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக அப்டேட் கேட்டு அலைய விட்டார். கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு முறையும் தள்ளிப் போய் கடைசியாக வரும் பிப்ரவரி 24ம் தேதி வெளியாக போகிறது.

காலா ஹீரோயின்

காலா ஹீரோயின்

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானா காலா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹூமா குரேஷி. பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் எப்படி விஜய்க்கு ஹீரோயின் ஆனாரோ? அதே போல காலா படத்தில் முன்னாள் காதலியாக நடித்த ஹூமா குரேஷி தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அஜித் ரசிகை

அஜித் ரசிகை

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதன் பாலிவுட் புரமோஷனை நடிகை ஹூமா குரேஷி பேட்டிகள் கொடுத்து ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் வட இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தான் ஒரு மிகப்பெரிய அஜித் ரசிகை என்றும் வலிமை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் கூறியுள்ளார்.

அதை சொல்ல முடியாது

அதை சொல்ல முடியாது

வலிமை படத்தில் உங்களின் கதாபாத்திரம் என்ன? என கேட்கப்பட்ட கேளிவிக்கு சிரித்த ஹூமா குரேஷி, வலிமை படம் குறித்தோ, எனது கதாபாத்திரம் குறித்தோ எந்தவொரு மூச்சும் விடமாட்டேன் என வழக்கமாக நடிகர்கள் சொல்வதை போலவே அவரும் தகவல்களை வெளியிட மறுத்து விட்டார்.

அந்த ரகசியம்

அந்த ரகசியம்

ஆனால், வலிமை படம் அஜித் ரசிகர்களுக்கான ட்ரீட் என்றும் 'அவுட் ஆஃப் தி வேர்ல்ட்' சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன என அந்த ஒரு ரகசியத்தை மட்டும் தனது பேட்டியில் கசிய விட்டுள்ளார். டீசர் மற்றும் டிரைலரை பார்த்ததிலேயே பைக்கை வைத்து வில்லனும் அஜித்தும் எப்படி அந்தரத்தில் சண்டை போடப் போகின்றனர் என்பதை காண ஆர்வமாக உள்ளனர். இதில், உலகத்தர சண்டைக் காட்சிகள் உள்ளன என்றும் டீசர் மற்றும் டிரைலரில் பார்த்தது எல்லாம் ஒன்றுமே கிடையாது. அதை விட நிமிஷத்துக்கு நிமிஷம் அஜித் ரசிகர்களை அசறவிட போகிறார் திரையில் என ஹூமா குரேஷி சொல்லி இருப்பது அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

இங்கே புரமோஷன் எப்போ

இங்கே புரமோஷன் எப்போ

வலிமை படம் இன்னும் இரு வாரங்களில் வெளியாக உள்ள நிலையில், புதிய புரமோஷன் காட்சிகள் மற்றும் பாடல்கள் வெளியிட வேண்டும் என அஜித் ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் எச். வினோத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். எந்த புரமோஷனும் செய்யவில்லை என்றாலும் டிக்கெட் புக்கிங் ஆரம்பமானதும் அடித்துப் பிடித்து அஜித் ரசிகர்கள் அதனை வாங்கி வசூலில் மிகப்பெரிய சாதனையை படைக்க காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X