twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படுக்கை, பாலியல் தொல்லை...: காலா பட நடிகை தில் பேட்டி

    By Siva
    |

    கேன்ஸ்: படுக்கைக்கு அழைப்பது குறித்து காலா பட நடிகை ஹூமா குரேஷியும் தெரிவித்துள்ளார்.

    பட வாய்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களை பற்றி பேசுகிறார்கள். மற்றவர்களோ இப்படி பழக்கம் இருப்பது உண்மை என்கிறார்கள்.

    கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ள காலா பட நடிகை ஹூமா குரேஷி கூறியிருப்பதாவது,

    படுக்கை

    படுக்கை

    பெண்களை படுக்கைக்கு அழைப்பது திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டும் செய்வது அல்ல. அனைத்து துறைகளிலும் உள்ளது. நானும் இதை எல்லாம் சந்தித்துள்ளேன். அட்ஜஸ்ட் செய்வது திரைத்துறையில் மட்டும் அல்ல அது அதிகாரத்தை பொருத்தது என்று நினைக்கிறேன்.

    தைரியம்

    தைரியம்

    அட்ஜஸ்ட் செய்யச் சொல்லி அழைப்பது குறித்து பெண்கள் தைரியமாக வெளியே சொல்வது கடினம். இந்தியாவில் பாலியல் தொல்லை குறித்து ஒரு பெண் பேசினால் உடனே அவரின் கேரக்டரை டேமேஜ் செய்குவிடுவார்கள். இது நியாயம் அல்ல.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    ஒரு பெண் தைரியமாக ஒரு விஷயம் குறித்து பேசினால் உதவி கேட்கிறார் என்று அர்த்தம். உடனே அவரின் கேரக்டரை டேமேஜாக்கக் கூடாது. மாறாக அவருக்கு உதவி செய்து, பாதுகாக்க வேண்டும். நமது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

    கனவு

    கனவு

    கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வந்தது கனவு மாதிரி இருந்தது. கேங்ஸ் ஆஃப் வாசிபூர் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் அதை பார்த்து அனைவரும் எழுந்து நின்று கை தட்டுவார்கள் எந்று எதிர்பார்க்கவில்லை என்றார் ஹூமா குரேஷி.

    English summary
    Kaala actress Huma Qureshi is in Cannes. She has talked about sexual advances in the fim industry and said that she has had to deal with people making such advances.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X