கண்ணீருடன் தியேட்டரிலிருந்து வெளியேறிய வலிமை பட கதாநாயகி...இதற்காகத்தானா?

சென்னை : நடிகர் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து நேற்றைய தினம் உலகளவில் வெளியாகியுள்ளது வலிமை.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

நேற்றைய தினம் படக்குழுவினர் முதல் ஷோவை சென்னையில் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தனர்.

வலிமை படம்

வலிமை படம்

நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, புகழ் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து நேற்றைய தினம் வெளியாகியுள்ள வலிமை படம். இந்தப் படம் உலகளவில் 4000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நேர்கொண்ட பார்வைக்கு பிறகு கடந்த இரு ஆண்டுகள் கழித்து அஜித்தின் வலிமை தற்போது ரிலீசாகியுள்ளது. இதையடுத்து படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகுதியாக காணப்பட்டது. தினந்தோறும் ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட்டார் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர்.

அப்டேட்டுக்கு நோ சொன்ன ரசிகர்கள்

அப்டேட்டுக்கு நோ சொன்ன ரசிகர்கள்

இவரின் இந்த செயல்பாடு போதும் பாஸ், எந்த அப்டேட்டும் வேண்டாம் என்று ரசிகர்களே கூறும் அளவிற்கு இருந்தது. இதனிடையே நேற்றைய தினம் இந்தப் படத்தை திரையரங்குகளில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ரசிகர்கள் எதிர்கொண்டனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

முதல் ஷோ பார்த்த படக்குழு

முதல் ஷோ பார்த்த படக்குழு

நேற்றைய தினம் காலை 4 மணியளவில் படத்தின் முதல் ஷோ திரையரங்குகளில் ரிலீசானது. இந்த முதல் நாள் முதல் ஷோவை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடினர். இது மட்டுமின்றி போனிகபூர், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினரும் ரசிகர்களுடன் முதல் ஷோவை பார்த்து மகிழ்ந்தனர்.

Recommended Video

ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்த வலிமை திரைப்படம்
கண்கலங்கிய ஹுமா குரேஷி

கண்கலங்கிய ஹுமா குரேஷி

படத்தை வலிமை படக்குழுவினர் ரசிகர்களுடன் சென்னை திரையரங்கில் கண்டு களித்தனர். இதனிடையே படத்தை பார்த்து ரசிகர்கள் தனக்கு கொடுத்த வரவேற்பை பார்த்து நெகிழ்ந்த ஹுமா குரேஷி, கண்கலங்கிய படி திரையரங்கை விட்டு வெளியேறினார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X