Huma Qureshi: அனுராக் காஷ்யப்புடன் படுத்தாரா அஜித் பட ஹீரோயின்?.. பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு!
மும்பை: ரஜினிகாந்தின் காலா மற்றும் அஜித்தின் வலிமை உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிகை நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகருடன் படுக்கையை பகிர்ந்தார் என பாலிவுட் நடிகை பாயல் கோஷ் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகி சமீபத்தில் 30 ஆண்டுகளை கடந்ததை அனுராக் காஷ்யப் கொண்டாடி வருகிறார்.
தன்னை ஆடிஷனில் பார்த்த முதல் முறையே 3 முறை பலாத்காரம் செய்தார் என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்த பாயல் கோஷ் தற்போது நடிகை ஹூமா குரேஷியும் அனுராக் காஷ்யப் உடன் படுக்கையை பகிர்ந்துள்ளார் என பற்ற வைத்துள்ளார்.

அனுராக் காஷ்யப் உடன் சண்டை: இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என பாலிவுட்டின் இளம் நடிகை பாயல் கோஷ் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து அடுக்கி வருகிறார்.
ஆனால், அவர் சொல்வதில், ஆதாரமே இல்லை என அனுராக் காஷ்யப் சொல்லி வருகிறார். நடிகை டாப்ஸி உள்ளிட்ட சிலர் அனுராக் காஷ்யப் அப்படிப்பட்டவர் இல்லை என்று வெளிப்படையாகவே ஆதரவு அளித்த நிலையில், பாலிவுட்டில் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு அனுராக் காஷ்யப் தப்பித்து வருகிறார் என தொடர்ந்து பாயல் கோஷ் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்.

ஹூமா குரேஷி அனுராக் காஷ்யம் தொடர்பு: அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என அஜித்தின் வலிமை படத்தில் நடித்த நடிகை ஹூமா குரேஷி மீடூ விவகாரம் எழுந்த போது சொன்னதாக வெளியான செய்திக் கட்டுரைகளை பதிவிட்டு தற்போது இருவருக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார் பாயல் கோஷ்.
படுக்கையை பகிர்ந்தார்: காலா மற்றும் வலிமை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி இயக்குநர் அனுராக் காஷ்யப் உடன் படுக்கையை சந்தோஷமாக பகிர்ந்தார். பின்னர், அவர் எப்படி பலாத்காரம் செய்தார் என சொல்லுவார் என அந்த செய்தியை வெளியிட்ட வட இந்திய மீடியாவை கேலி செய்து தற்போது பாயல் கோஷ் பதிவிட்டுள்ள போஸ்ட் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

சமீபத்தில் அனுராக் காஷ்யப் நடிகை சன்னி லியோனை வைத்து இயக்கிய கென்னடி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னதாக டாப்ஸியை வைத்து அனுராக் இயக்கிய தோபாரா 2 படம் ஃபிளாப் ஆனது.


Click it and Unblock the Notifications











