காலா ஷூட்டிங்கில் இருந்து 2 நாள் லீவு கேட்ட ஹூமா: காரணம் என்ன தெரியுமா?
சென்னை: பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி 2 நாட்கள் பிரேக் கொடுக்குமாறு இயக்குனர் பா. ரஞ்சித்திடம் கேட்டுள்ளார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் காலா. காலா படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை ஹூமா தனக்கு 2 நாட்கள் விடுப்பு வேண்டும் என்று ரஞ்சித்திடம் கேட்டுள்ளார். ஆசிட் வீச்சு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களை கவுரவிக்கும் விழா துபாயில் நடக்கிறது.
அந்த விழாவில் கலந்து கொள்ளவே விடுப்பு கேட்டுள்ளார் ஹூமா. 21ம் தேதி நடக்கும் விழாவில் கலந்து கொள்ள ஹூமா 20ம் தேதி சென்னையில் இருந்து துபாய் செல்கிறாராம்.
தைரியமானவர்கள் மத்தியில் இருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைத்து பெருமைப்படுவதாக ஹூமா தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications