Human: விஜய்சேதுபதியின் உணர்சி பொங்கும் வித விதமான போட்டோஷூட் வீடியோ.. வேற லெவலில் வைரலாகுது!

சென்னை: நடிகர் விஜய்சேதுபதியின் 'HUMAN' போட்டோஷூட் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களை தனது டிவிட்டரில் பெற்றுள்ளதை கொண்டாடும் விதமாக 'ஒ' எனும் எழுத்துடன் இருக்கும் புகைப்படத்தை விஜய்சேதுபதி வெளியிட்டு இருந்தார்.

பலரும் அதை ஓம் என்றே நினைத்து கமெண்ட் செய்திருந்தனர். இந்நிலையில், 'அ', 'ஒ' என்ற தமிழ் எழுத்துக்களுடன் அவர் எடுத்திருக்கும் முழு போட்டோஷூட் வீடியோவாக வெளியிடப்பட்டிருக்கிறது.

பிளேபாய் போட்டோகிராஃபர்

பிளேபாய் போட்டோகிராஃபர்

பிரபல இந்திய புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன் சர்வதேச அளவில் தனது புகழை நிலை நாட்டி வருகிறார். பிளேபாய், மேக்ஸிம் உள்ளிட்ட பல சர்வதேச ஃபேஷன் இதழ்களுக்கு இவர் புகைப்படக் கலைஞராக பணி ஆற்றியுள்ளார். நடிகர் விஜய்சேதுபதியின் லாக்டவுன் போட்டோஷூட்டை தற்போது இவர் தான் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

லாக்டவுன் போரிங்

லாக்டவுன் போரிங்

நடிகனாக வேண்டும் என்ற போராட்டத்தில் பல தடைகளை தாண்டி இன்று மக்கள் செல்வனாக ரசிகர்கள் மனங்களை பிடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. இவர் குடும்பத்துடன் செலவிட்டதை விட ஷூட்டிங் ஸ்பாட்களில் தான் அதிக நாட்களை செலவழித்து இருப்பார். வாரம் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்ற அளவுக்கு அவரை கலாய்த்து வந்த நிலையில், தற்போது ஷூட்டிங் இல்லாமல், இந்த லாக்டவுனில் வீட்டில் முடங்கி இருக்கிறார்.

மனிதர்களின் மனநிலை

மனிதர்களின் மனநிலை

சுமார் 4 மாதங்களாக வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை பிரதிபலிக்கும் படியான போட்டோஷூட்டை சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி, பிரபல புகைப்படக் கலைஞர் எல். ராமச்சந்திரனுடன் இணைந்து எடுத்துள்ளார். தற்போது அதன் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய்சேதுபதி வெளியிட்டு இருக்கிறார்.

தாடியுடன்

தாடியுடன்

லாக்டவுனுக்கு முன்னதாக நடைபெற்ற மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பார்த்த விஜய் சேதுபதியா இவர்? என்று வியக்க வைக்கும் அளவுக்கு, வெள்ளை தாடியுடன் வேற ஒரு கெட்டப்பில் டோட்டலாக மாறி இருக்கும் விஜய் சேதுபதியின் ஒவ்வொரு எமோஷனல் லுக்கும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

கண்ணீர்

கண்ணீர்

சந்தோஷம், சோகம், கோபம், விரக்தி, அழுகை என நவரச ரியாக்‌ஷனையும் இந்த போட்டோஷூட் வீடியோவில் நடிகர் விஜய்சேதுபதி தாராளமாகவே கொடுத்து இருக்கிறார். பெண் பொம்மை ஒன்றுக்கு அருகில் தூங்குவது போன்றும், கண்களில் கண்ணீர் சிந்தும் அளவுக்கும் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

பிளாஸ்மா தானம்

பிளாஸ்மா தானம்

நடிப்பை தாண்டி பல நல்ல காரியங்களையும் செய்து சமூகத்தில் நல்ல மனிதர் என்ற பெயரை எடுத்து வருகிறார் விஜய் சேதுபதி, சில தினங்களுக்கு முன்பு, தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனாவில் மீண்ட நோயாளிகள் தங்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏகப்பட்ட படங்கள்

ஏகப்பட்ட படங்கள்

ஜனநாதன் இயக்கத்தில் ஸ்ருதி ஹாசனுடன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் லாபம், சீனு ராமசாமியின் மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கும் மாஸ்டர், அமீர்கான் படம் என ஏகப்பட்ட படங்கள் நடிகர் விஜய் சேதுபதி கைவசம் இருக்கின்றன. லாக்டவுன் முடிந்தவுடன், வாரம் ஒரு படம் மீண்டும் ரிலீஸ் ஆனால் தான் மனுஷன் பழையபடி நார்மலாக மாறுவார் போல தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X