கோச்சடையான் வெற்றிபெற வேண்டி 200 ரசிகர்கள் திருமலைக்கு நடைபயணம்!
திருப்பதி: ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் கோச்சடையான் படம் பெரும் வெற்றி பெற வேண்டி சோளிங்கர் ரஜினி ரசிகர்கள் திருப்பதி திருமலைக்கு நடைபயணம் மேற்கொண்டனர்.
ரஜினிக்காக, அவரது படங்களின் வெற்றிக்காக அவரது ரசிகர்கள் பாத யாத்திரை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பிரார்த்தனைகளைச் செய்து வருகின்றனர்.

பிரார்த்தனைகள்
அவர் உடல்நலம் குன்றியபோது, மண்சோறு சாப்பிட்டனர். முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தனர். முழங்காலில் மலைப் படி ஏறினர். கொளுத்தும் வெயிலில் கோவில்களுக்கு பாத யாத்திரை மேற்கொண்டனர்.

கிடா வெட்டு
அந்த வகையில், இப்போது ரஜினி மூன்று வேடங்களில் நடித்து வெளிவரும் கோச்சடையானுக்காக பிரார்த்தனைகளை ஆரம்பித்துவிட்டனர். சில இடங்களில் கிடா வெட்டுடன் பூஜை நடத்தியுள்ளனர்.

சோளிங்கரிலிருந்து
இப்போது சோளிங்கர் பகுதி ரஜினி ரசிகர்கள் திருப்பதி திருமலைக்கு நடந்தே சென்று படத்தின் வெற்றிக்குப் பிரார்த்தனை செய்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட ரஜினி மன்ற பொருளாளரும், சோளிங்கர் பகுதி நிர்வாகியுமான என் ரவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் நேற்று திருமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர்.

சிறப்பு பூஜை
உலக அளவில் பெரிய வெற்றிப்படமாக கோச்சடையான் அமைய வேண்டும் என அவர்கள் பிரார்த்தனை கோஷங்கள் எழுப்பினர். பாதயாத்திரை முடிந்ததும் திருமலையில் சிறப்பு பூஜை நடத்தினர்.

சோளிங்கர் ரவி
இதுகுறித்து சோளிங்கர் என் ரவியிடம் கேட்டபோது, " இந்திய சினிமாவில் ஒரு புதிய தொழில்நுட்பம் தலைவரால் அறிமுகமாவது எங்களுக்கு மட்டுமல்ல, சினிமா ரசிகர்கள் அத்தனை பேருக்குமே பெருமை. ஒவ்வொரு தமிழனையும் தலைநிமிர வைத்திருக்கிறார் அவர். வெறும் பெருமை பேசுவதோடு போகக் கூடாது.. வர்த்தக ரீதியாக இந்திய அளவில், சர்வதேச அளவில் இந்தப் படம் சாதனைகளைப் படைக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த பாதயாத்திரை," என்றார்.

Click it and Unblock the Notifications