For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பசிக்கொடுமைதான் உலகிலேயே கொடூரமானது-பாடலாசிரியர் சிநேகன்

  |
  Lyricist Snehan | பசிக்கொடுமைதான் உலகிலேயே கொடூரமானது-பாடலாசிரியர் சிநேகன்-வீடியோ

  சென்னை: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அப்ஸரா ரெட்டி நேற்று சென்னை VR மாலில் நடத்திய நிகழ்வில் நடிகை ஓவியா, கவிஞர் சிநேகன், நடிகர் சாந்தனு ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் பேசிய கவிஞர் சிநேகன், இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான பசி இருக்கத்தான் செய்கிறது. அதில் வயிற்றுப் பசி என்பது மிகவும் கொடுமையானது. இதை ஒழிக்க வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவிற்கு நம்மை சுற்றி இருப்பவர்களின் பசியையாவது போக்க வேண்டும், என்றார்.

  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், பொதுமக்கள் இடையே மிகவும் பிரபலமானவருமான திருநங்கை அப்ஸரா ரெட்டி. காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய பதவி வகிக்கும் முதல் திருநங்கை இவர் என்ற பெருமைக்குரியவர். சமூக அக்கறை மிக்க பல செயல்களில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

  Hunger is the worst in the world-Lyricist Snehan

  அந்த வகையில் நேற்று செப்டம்பர் 29ம் தேதி சென்னை அண்ணாநகர் அருகே உள்ள VR மாலில் பசியை ஒழிக்கவேண்டும் என்ற தலைப்பில் ஒரு ஈவென்ட் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் புகழ் ஓவியா, சினேகன், நடிகர் சாந்தனு மற்றும் கீர்த்தி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

  நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ பேரை பசியோடு பார்க்கிறோம். பசிக்கொடுமை என்பது, உலகிலுள்ள அனைத்து விதமான கொடுமைகளையும் விடவும் கொடூரமானது. நம்மால் ஒரு வேளை கூட சாப்பிடாமல் இருப்பது என்பது கொஞ்சம் கடினமான செயலாக இருக்கையில், எத்தனை எத்தனையோ மக்கள் பல நாட்களாக உணவின்றி பசி பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

  அது போன்ற மக்களுக்கு நாம் ஒருவரின் பசியையாவது தீர்க்க முடிந்தால் அதுவே மிகப்பெரிய காரியமாகும். இப்படி நம் ஒவ்வொருவரும் யாராவது ஒருவரின் பசியை போக்கினால் இந்த உலகையே பசியில்லா உலகாக மாற்றிவிடலாம்.

  "ப்ளீஸ்" எவிக்சனுக்கு பின் தர்ஷன் போட்ட உருக்கமான முதல்பதிவு.. கண்ணீரில் ரசிகர்கள்.. அதிரும் இணையம்

  இந்த உன்னத நோக்கத்தோடு, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் சினேகன் கலந்துகொண்டு பேசுகையில், பசியை பற்றி பாரதி அன்றே, தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னார். ஆனால் இன்றும் இந்த பசிக் கொடுமை நீடித்துக்கொண்டே இருப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது.

  Hunger is the worst in the world-Lyricist Snehan

  இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான பசி இருக்கத்தான் செய்கிறது. அறிவுப் பசி, புகழ் பசி, பணப்பசி, கலை பசி, தன் பணியின் மேல் பசி, இப்படி பலருக்கு பல பசி இருக்கும் போது வயிற்றுப் பசி என்பது மிகவும் கொடுமையானது. இதை ஒழிக்க வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவிற்கு நம்மை சுற்றி இருப்பவர்களின் பசியையாவது போக்க வேண்டும், என்றார்.

  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா பேசுகையில், பசியைப் பற்றி விளக்கமாக பேசுவதற்கு நான் பொருத்தமானவர் அல்ல. ஏனெனில் நான் மிகவும் வசதியாகவும், ஆடம்பரமாகவும் வாழ்ந்து விட்டதால் பசியின் கொடுமை பற்றி எனக்கு தெரியாது. பசியைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை விட பசியால் வாடுபவர்களுக்கு உதவ முன் வரவேண்டும். அது தான் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வாகும், என்றார்.

  இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி சாந்தனுவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்கள் இந்த பசி பற்றி பேசுகையில், பசியின் கொடுமை பற்றி சமூக வலைதளங்களில் பகிர்வதை விட நாம் ஒவ்வொருவரும் களத்தில் முழுமூச்சாக இறங்கி வேலை பார்த்தால் மட்டுமே இதனை ஓரளவிற்காவது குறைக்கமுடியும். நாம் சோசியல் மீடியாவில் பகிர்வதால் எந்த ஒரு பயனும் இருக்காது. அதற்கான பணியில் ஈடுபட்டால் மட்டுமே முடியும். என்றனர்.

  மேலும் இந்த நிகழ்ச்சியின் போது மதுமிதா என்ற ஒரு கண் தெரியாத ஒரு குழந்தை ஒன்று மேடை ஏறி பாடியது. அதோடு இந்த நிகழ்ச்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் மனைவி பார்வதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  ஞாற்றுக்கிழமையான நேற்று ஏகப்பட்ட பார்வையாளர்கள் விஆர் மாலுக்கு வந்திருந்ததால், இந்நிகழ்ச்சியின் மூலம் பலருக்கு இந்த செய்தி போய் சேர்ந்திருக்கும். நிச்சயம் அவர்கள் ஒவ்வொருவரும் யாராவது ஒருவரின் பசியை போக்கினால் கூட இந்த நிகழ்ச்சி நடத்தியதற்கான வெற்றி கிடைத்துவிடும்.

  Read more about: snehan oviya ஓவியா
  English summary
  Congress General Secretary Transgender Apsara Reddy hosted a function at the VR Mall in Chennai yesterday. Speaking of it, the Lyricist Snehan said that, every human being in the world has every kind of hunger. He said that in order to eradicate this, we should go as far as we can to satisfy the hunger of those around us.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X