பா. ரஞ்சித் படம் பாருங்க.. ஹீரோ வொர்ஷிப் படம் பார்க்காதீங்க.. ஹைதராபாத் ஏசிபி திடீர் அட்வைஸ்!

ஹைதராபாத்: நடிகர்களை தூக்கி வைத்து கொண்டாடும் திரைப்படங்களை பார்க்காமல் மிடில் கிளாஸ் மக்கள் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் நல்ல கருத்துள்ள படங்களை தியேட்டருக்குச் சென்று பாருங்கள் என திடீரென ஹைதராபாத் ஏசிபி விஷ்ணுமூர்த்தி பேசியுள்ளது அல்லு அர்ஜுன் ரசிகர்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது.

அல்லு அர்ஜுனுக்கு எதிராக ஆளும் தெலங்கானா அரசு டைரக்ட் அட்டாக் செய்து வருவதாக ரசிகர்கள் தங்கள் எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். #StopCheapPoliticsOnALLUARJUN என்கிற ஹாஷ்டேக்கையும் அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

allu arjun pa ranjith pushpa 2

புஷ்பா 2 படத்தில் முதலமைச்சரை அல்லு அர்ஜுன் எதிர்க்கும் காட்சிகள் எல்லாம் இடம்பெற்ற நிலையில், அதன் காரணமாகத்தான் ரேவந்த் ரெட்டி பழிவாங்குவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அல்லு அர்ஜுன் தனது ரசிகர்கள் யாரும் தேவையற்ற கருத்துக்களை பதிவிட வேண்டாம் என கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து ரேவந்த் ரெட்டிக்கு எதிரான சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.

அல்லு அர்ஜுனுக்கு எதிராக: ரேவதி எனும் பெண் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்தை முதல் நாள் இரவு சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்ட ப்ரீமியர் காட்சியை தனது குடும்பத்துடன் காண வந்த இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். அவரது 9 வயது மகனும் மூளைச்சாவு அடைந்திருப்பது அனைவரையும் உலுக்கி எடுத்துள்ளது. இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், தெலங்கானா உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், அல்லு அர்ஜுன் மீது முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டுகளை அடுக்கி பேசிய நிலையில், ஹைதராபாத் ஏசிபியும் அல்லு அர்ஜுனுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டியும் கடுமையாக எச்சரித்தும் வருகிறார்.

பா. ரஞ்சித் படம் பாருங்க: டோலிவுட்டில் பிரபாஸ், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்கள் படங்கள் தான் கோடிக் கணக்கில் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியடைந்து வருகிறது. ஆனால், 2000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை டிக்கெட் வாங்கி மாஸ் ஹீரோக்கள் படங்களை பார்க்க வேண்டாம் என்றும் மிடில் கிளாஸ் மக்கள் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் சமூக நல அக்கறை கொண்ட படங்களை தியேட்டருக்குச் சென்று பார்க்கலாம். ஹீரோ வொர்ஷிப் படங்களை பொறுமையாக குறைந்த செலவில் ஓடிடியில் பாருங்கள் என ஹைதராபாத் ஏசிபி அல்லு அர்ஜுன் பிரச்சனையை முன்னிட்டு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X