அப்ப அமேசான்ல வராதா? விஜய்யின் பிகில் டிஜிட்டல் ரிலீசுக்கு தடை!

By

ஐதராபாத்: பிகில் படம் தொடர்பாக தெலுங்கு இயக்குநர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், அந்த படத்தை டிஜிட்டலில் வெளியிட ஐதராபாத் சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பிகில்

பிகில்

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆன இந்தப் படம் தெலுங்கில் விசில் என்ற பெயரில் வெளியானது. கால்பந்து பயிற்சியாளரைப் பற்றிய இந்தப் படத்தின் கதை, தன்னுடையது என்று கூறி செல்வா என்ற உதவி இயக்குநர் வழக்குத் தொடர்ந்தார்.

தெலுங்கு இயக்குனர்

தெலுங்கு இயக்குனர்

இந்நிலையில் தெலுங்கு இயக்குநர் நந்தி சின்னி குமார் என்பவர், இயக்குநர் அட்லீ மீது ஐதராபாத் கச்சிபவுலி போலீஸ் ஸ்டேஷனில் மோசடி புகார் கொடுத்தார்.அவர் கூறும்போது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் கால்பந்துவீரரும் தற்போதைய பயிற்சியாளருமான அகிலேஷ் பாலின் கதையை சினிமாவாக எடுக்க முடிவு செய்திருந்தேன். இதற்காக அவரை சந்தித்து ஒப்பந்தம் போட்டோம்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்நிலையில் பிகில் படத்தின் டிரைலரை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தேன். அகிலேஷ் பாலின் கதையும் பிகில் கதையும் ஒன்று போல் இருந்தது. இதையடுத்து, நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ ஆகியோரை தொடர்பு கொள்ள முயன்றேன். முடியவில்லை. நான் இயக்க இருந்த கதையை திருடி படம் எடுத்த அவர்கள் மீது, காப்பி ரைட் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

வழக்கு

வழக்கு

இதையடுத்து, இந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் சேட்டிலைட், டிஜிட்டலில்

வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று கூறி ஐதராபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். விசாரித்த நீதிமன்றம் பிகில், அதன் தெலுங்கு பதிப்பான விசில் படங்களை டிஜிட்டல், யுடியூப் தளங்களில் வெளியிட நேற்று இடைக்கால தடை விதித்துள்ளது.

பிகில் படம் அமேசானில் பிரைம்டைமில் இந்த மாதம் இறுதியில் வெளியாக இருந்தது. இந்த தடை காரணமாக வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Read more about: vijay bigil பிகில்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X