சிவன், விநாயகர் பற்றி அவதூறு: ராம்கோபால் வர்மா மீதான விசாரணைக்கு தடை
இந்துக் கடவுள்களான சிவபெருமான், விநாயகர் பற்றி அவதூறாகப் பேசியதாக இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிரபல இந்திப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்து கடவுளை அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. சிவனை பற்றி கூறுகையில், "சிறு குழந்தை என்றும் பார்க்காமல் விநாயகர் தலையை வெட்டியவர். இது அல்கொய்தா தீவிரவாதியை விட மோசமான செயல்,'' என்றார்.

விநாயகர் பற்றி கூறுகையில், ‘‘தனது தலையை காப்பாற்ற முடியாதவர் எப்படி மக்களை காப்பாற்றுவார்'' என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து அவர் மீது ஐதராபாத் சரூர்நகர் போலீசில் வக்கீல் கருணா சாகர் என்பவர் வர்மா மீது புகார் செய்தார். "ராம்கோபால் வர்மா பேச்சு இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று புகாரில் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் ராமகோபால் வர்மா மீது 153-ஏ, 505, 288, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் ராம்கோபால்வர்மா சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘‘நான் திட்டமிட்டு இவ்வாறு பேசவில்லை. எனது பேச்சு மக்களை புண் படுத்துவதுபோல் இருந்தால் அதற்காக பொதுமன்னிப்பு கோருகிறேன்," என்று தெரிவித்து விட்டேன். எனவே என் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
மனுவை நீதிபதி ராஜ இளங்கோவன் விசாரித்து ராம்கோபால் வர்மா மன்னிப்பு கேட்டுள்ளதால், அவர் மீதான விசாரணையை 2 வாரத்துக்கு நிறுத்தி வைக்குமாறு உத்தர விட்டார்.


Click it and Unblock the Notifications











