twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீங்கள் தான் உண்மையான ஹீரோ.. தெலுங்கானா போலீஸுக்கு நயன்தாரா பாராட்டு!

    |

    சென்னை: சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை என்ற கூற்று இன்று உண்மையாகி இருக்கிறது. உண்மையான நாயகர்களாக தெலுங்கான காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள் என்று நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    கடந்த மாதம் தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என பலரும் போராடி வந்த நிலையில், குற்றவாளிகள் நாலு பேரையும் தெலுங்கானா காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை பாராட்டி நடிகை நயன்தாரா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

     Hyderabad police real hero says nayanthara

    சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை என்ற கூற்று இன்று உண்மையாகி இருக்கிறது. உண்மையான நாயகர்களாக தெலுங்கான காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள்.

    சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை என்ற கூற்று இன்று உண்மையாகி இருக்கிறது. உண்மையான நாயகர்களாக தெலுங்கான காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்கு புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி, இதுவே நியாயமான மனித மிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன்.

    நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்து வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல் அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயம் தரும். மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும், அன்பு செலுத்துவதும், இரக்கம் கொள்வதுமே ஆகும்.

    நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம், நம் குழந்தைகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டும்.பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர் கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியதும் நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும். இதுவரை

    எந்த நடிகையும் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்காத நிலையில் துணிச்சலான நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டு இருப்பதை பலரும் பாராட்டி உள்ளனர்.

    English summary
    Hyderabad police realy hero nayanthara
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X