ஹைதராபாத்தில் விபச்சார விடுதியில் சிக்கிய சின்னத்திரை நடிகை
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலை அடைத்து இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் டிவி தொடர்களில் நடிக்கும் இளம் நடிகை உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஹைதராபாத்தில் சில இடங்களில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பஞ்சரா ஹில்ஸ் போலீசார் எல்லாரெட்டிகுடா பிரகதி நகரில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து தெலுங்கு டிவி தொடர்களில் நடிக்கும் 22 வயது இளம் நடிகை மற்றும் ஒரு பெண் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஸ்ரீநகர் காலனியில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு பெண் சிக்கினார். இது தவிர பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் லோகேஷ் மற்றும் அவரது வாடிக்கையாளர் பவன் என்பவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications