இப்போ ரிலீஸ் ஆனாலும் ஒரு கை பார்க்கும்.. ஆனால் அறிவிப்புகளோடு நின்றுபோன காமெடி படங்கள்!

சென்னை: சினிமா உலகில் அவ்வப்போது நடைபெறும் சில சுவாரஸ்யமான சம்பவங்களால், திரைத்துறையைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. அப்படியான ஒரு படம் தான் சுந்தர் சி - யின் மத ஜக ராஜா படம். 12 ஆண்டுகளுக்கு முன்னர் 2013 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவேண்டிய இந்த படம் இந்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆனது மட்டும் இல்லாமல் படம் பிரமாண்டமான வெற்றியைக் குவித்தது.

இந்த படம் பெற்ற வெற்றி, ரசிகர்களை கடந்து திரைத்துறையில் மற்றவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அப்படி, இப்போது வரை ரிலீஸ் ஆகாமல் உள்ள நகைச்சுவை மற்றும் டார்க் காமெடி ஜெர்னரில் பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவான படங்களில் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மூன்று படங்களை இந்த பட்டியலில் பார்க்கலாம்.

Hyped Tamil Humour and Dark Comedy Films That Never Released What Is The Issue Original
Photo Credit:

அலாவுதீனின் அற்புத கேமரா: மூடர் கூடம் போன்ற நேர்த்தியான அரசியல் வசனங்கள், டார்க் காமெடி காட்சிகள், ஒட்டுமொத்தமாகவே ஒரு வீட்டிற்குள் படத்தை எடுத்து சலிப்பு தட்டாமல் படத்தை நகர்த்திய திரைக்கதை என என தனது அறிமுக படத்திலேயே வெற்றி கண்டார் இயக்குநர் நவீன். இயக்கியது மட்டும் இல்லாமல் நடிப்பு, தயாரிப்பு என எல்லாம் அவர்தான். முதல் படம் ஏற்படுத்திய தாக்கம் அவரது அடுத்த படத்தின் மீது ரசிகர்களின் கவனம் குறைந்தது. இப்படி இருக்கும்போது இவரது இரண்டாவது படம் தான் அலாவுதீனின் அற்புத கேமரா. மூடர் கூடம் 2013இல் ரிலீஸ் ஆனது. அதன் பின்னர் 12 ஆண்டுகள் ஆகிவிட்டது நவீன் இயக்கத்தில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. 2019 இல் அலாவுதீனின் அற்புத கேமரா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் நின்னு பேசும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு உள்ளது. இந்த படத்திலும் நவீன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ரெண்டாவது படம்: தமிழ் படம் படத்தின் இயக்குநர் சி.எஸ். அமுதன். இந்த படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் பங்கமாக கலாய்த்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார். இவரது இரண்டாவது படத்தின் பெயர்தான் இரண்டாவது படம். விமல், ரம்யா நம்பீசன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான இந்த படத்தின் டிரைலர் 2014இல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இரண்டாவது படத்தையும் முழு நீள காமெடி படமாக எடுத்து வைத்துள்ளார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். இப்படி இருக்கும்போது இந்த படம் ஏன் ரிலீஸ் ஆகவில்லை என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

Hyped Tamil Humour and Dark Comedy Films That Never Released What Is The Issue Original
Photo Credit:

பார்ட்டி: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான பார்ட்டி படத்தில் அவரது வழக்கமான டீமைக் கடந்து சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல சீனியர் நடிகர்களும் நடித்துள்ளார்கள். படத்திற்கு வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி இசையமைத்துள்ளார். பொருளாதாரக் காரணத்தால் படம் வெளியாகாமல் உள்ளது. இந்த படமும் ரிலீஸ் ஆனால் பந்தயம் அடிக்கும் எனக் கூறும் அளவுக்கு படத்தின் டீசர் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. காரணம் படத்தின் டீசர் வெங்கட் பிரபுவின் காமெடி சிறப்பாக இருந்தது தான். மத கஜ ராஜா படத்தைப் போல இந்த படங்களும் நகைச்சுவையான படங்கள் தான் என்பது அந்தந்த படங்களின் டீசர் மற்றும் டிரைலரைப் பார்த்தாலே தெரிகிறது. அப்படி இருக்கும்போது இந்த படங்களை விரைவில் ரிலீஸ் செய்தால் மூன்று படங்களும் பந்தயம் அடிக்கும் என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

Take a Poll

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X