விக்ரம் மனது வைத்ததால் மாமன்னன் படத்தில் நடித்தேன்.. நடிகர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை : சமூக அக்கறை கொண்ட கதை களத்தில் உருவாகும் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்

அந்தவகையில் கனா பட இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் விக்ரம் மனது வைத்ததால் மாமன்னன் படத்தில் நடிக்க முடிந்தது என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ்

இயக்குனர் மாரி செல்வராஜ்

இயக்குனர் பா ரஞ்சித் இயக்குனராக மட்டுமல்லாமல் நீலம் புரோடக்சன் சென்ற தயாரிப்பின் மூலம் புது புது இயக்குனர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்து வருகிறார் அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராம் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மேலும் இந்த திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்று குவித்தது. இந்தப் படத்தில் ஆனந்தி கதிட் யோகி பாபு மாரிமுத்து என பலர் நடித்திருந்தனர். தமிழ்நாட்டில் இன்றளவும் இருக்கும் தீண்டாமை குறித்து மிக தைரியமாக இந்த படத்தில் யார் மனதும் புண்படாத வகையில் மாரி செல்வராஜ் கூறியிருந்தது அனைவருக்கும் பிடித்திருந்தது

துருவ் விக்ரம் கபடி வீரராக

துருவ் விக்ரம் கபடி வீரராக

பரியேறும் பெருமாள் கொடுத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கினார் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று பல விருதுகளை குவித்து வருகிறது. அடுத்ததாக துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்க மாரி செல்வராஜ் ஆயத்தமாகி வந்தார் தமிழ்நாட்டில் பிரபல கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க ஆயத்தமாகி வந்தார் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டு நடைபெற்று கொண்டிருந்தது

மாமன்னன்

மாமன்னன்

இந்த நிலையில் திடீரென மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் இணையும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. இந்த படமும் மிகவும் வித்தியாசமான கதை களத்தில் உருவாகி வரும் நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் மாமன்னன் படப்பிடிப்பு தொடங்கியது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

விக்ரம் மனது வைத்ததால் தான்

விக்ரம் மனது வைத்ததால் தான்

அப்போது மாமன்னன் படத்திற்கு முன்பாக மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி வந்தார் அப்பொழுது விக்ரமுக்கு கால் செய்து மாமன்னன் படத்தில் நடிக்க வேண்டும் அதனால் துருவ் படத்தின் படப்பிடிப்பை கொஞ்சம் தள்ளி வைக்க முடியுமா எனக் கேட்டதற்கு அவரும் ஓகே தாராளமாக செய்து கொள்ளுங்கள் என பர்மிஷன் கொடுத்தார். விக்ரம் மனது வைத்ததால் தான் இப்பொழுது மாமன்னன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X