டீச்சர் வச்சு மலையாளம் கத்துக்கறேன்... சன்னி லியோன் உற்சாகம்
மும்பை : பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளவர்.
அவர் அடுத்ததாக ஷெரோ என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் அவர் வீட்டிலேயே தனது ப்ராஜெக்ட்களை பிராக்டீஸ் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஒரு பாடலுக்கு நடனம்
பாலிவுட்டின் கவர்ச்சிப்புயலாக வலம்வந்து கொண்டிருப்பவர் சன்னி லியோன். இவர் தென்னிந்திய மொழி படங்களிலும் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகிறார். இவருக்கென்று இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது மலையாளத்தில் ஷெரோ என்ற திரைப்படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

பயிற்சி செய்யும் லியோன்
அனைவரும் இந்த நேரத்தை பயன்படுத்தி தங்களது கேரக்டருக்காக உழைத்து வருகின்றனர். மீண்டும் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்னதாக இந்த ஓய்வு சிறப்பாக நம்மை உருவாக்கிக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும். வீடியோ கால் உள்ளிட்டவற்றின் உதவியுடன் ஸ்கிரிப்டை பெற்று தான் பயிற்சி செய்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பயிற்சி நேரத்தில் மாற்றம்
மேலும் தன்னுடைய மகளும் தானும் ஒரே அறையில் அவரவர் வேலைகளை செய்து வருவதாகவும் தன்னுடைய குழந்தை தன்னுடன் இருப்பதை தானும் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய குழந்தையின் பாட நேரத்திற்கு தகுந்தாற்போல தன்னுடைய நேரத்தை மாற்றிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

சூட்டிங்கில் பங்கேற்க ஆர்வம்
சூட்டிங், சினிமா நிகழ்ச்சிகள் போன்றவை இல்லாததால் வீட்டிலேயே டீச்சர் வைத்து தான் மலையாளம் கற்றுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். மலையாள படம் ஷெரோவில் கமிட் ஆகியுள்ள சன்னி லியோன் அதன் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக ஆவலுடன் காத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











