நான் இப்போ செலிபிரிட்டி.. என்னை எப்படி தொட்டு பேசலாம்.. ரசிகையிடம் மல்லுக்கட்டிய திடீர் பாடகி!

Recommended Video

நான் இப்போ செலிபிரிட்டி.. என்னை எப்படி தொட்டு பேசலாம்

சென்னை: தன்னுடன் செல்பி எடுக்க விரும்பிய ரசிகையை என்னை எப்படி தொட்டுப்பேசலாம் என திடீரென பாடகியான ராணு மோண்டால் பெண் ஒருவருடன் மல்லுக்கட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

மேற்குவங்க மாநிலம் நாடியா ரயில் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ராணு மோண்டால் என்ற அந்த பெண்மணி அவ்வப்போது இந்தி பாடல்களை பாடி பிச்சைக் கேட்பது வழக்கம்.

அப்படி அவர் பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் பாடிய 'ஏக் பியார் கா நக்மா ஹே' என்ற இந்தி பாடலை பாடியிருந்தார் ராணு.

ஓவர் நைட்டில் பிரபலம்

ஓவர் நைட்டில் பிரபலம்

இந்த பாடல் ஃபேஸ்புக் டிவிட்டர் என பரவியதால் ஓவர் நைட்டில் நாடு முழுவதும் பிரபலமானார் ராணு மோண்டால். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி அவருக்கு பாடுவதற்கு வாய்ப்பு வழங்கியது.

குவியும் வாய்ப்புகள்

குவியும் வாய்ப்புகள்

அந்தப் பெண்ணுக்கு, தான் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் பாடல் பாட வாய்ப்பு தந்தார் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன். இதனை தொடர்ந்து அவருக்கு பாலிவுட் படங்களில் பாடுவதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர்.

ரசிகர்கள் விருப்பம்

ரசிகர்கள் விருப்பம்

இதனால் படுபிஸியாகிவிட்டார் ராணு மோண்டால். ராணு மோண்டாலை வெளியில் பார்க்கும் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

கடுப்பான ராணு

அப்படி செல்பி எடுக்க விருப்பப்பட்ட பெண் ஒருவர், ராணுவை தெரியாத்தனமாக தொட்டுவிட்டார். அவ்வளவுதான் கோபத்தின் உச்சிக்கு சென்ற ராணு.. நான் இப்போது செலிபிரிட்டி.. என்னை எப்படி நீங்கள் தொட்டுப் பேசலாம்.. ஒரு செலிபிரிட்டியிடம் இப்படிதான் நடந்துகொள்வீர்களா என்று ஏறு ஏறு என ஏறிவிட்டார்.

மொபைலில் வீடியோ

மொபைலில் வீடியோ

இந்த சம்பவம் ராணு ஷாப்பிங் சென்ற இடத்தில் அரங்கேறியிருக்கிறது. இதனை தனது மொபைலில் வீடியோ எடுத்த ஒருவர் அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டியிருக்கிறார்.

மீண்டும் ரயில்வே ஸ்டேஷன்தான்

எந்த சோஷியல் மீடியாவின் மூலம் பிரபலமடைந்தாரோ அந்த சமூக வலைதளத்தின் மூலமாகவே விமர்சனத்திற்கு ஆளாகிவிட்டார். அந்த வீடியோவை ஷேர் செய்யும் பலரும், ராணு பிரபலமான பிறகு அவரது நடவடிக்கையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் இப்படியே நடந்துகொண்டால் மீண்டும் ரயில்வே ஸ்டேஷனுக்குதான் செல்ல வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: controversy video
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X