Don't Miss!
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
“நான் சென்னைல வளர்ந்த பையன், அதனால இந்தி தெரியாது”: இந்தியை தில்லாக போட்டுத்தாக்கிய நாக சைத்தன்யா!
ஐதாராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைத்தன்யா, தற்போது வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
அவர் முதன்முறையாக பாலிவுட்டில் அமீர் கானுடன் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படம் அடுத்த வாரம் வெளியாகிறது.
இந்நிலையில், இதுவரை இந்தி படங்களில் நடிக்காமல் இருந்ததற்கு நாக சைத்தன்யா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6ல் விஜய் டிவி பிரபலங்கள்?.. கசிந்தது போட்டியாளர்கள் பற்றிய தகவல்!

நாகர்ஜுனாவின் வாரிசு
தெலுங்கில் டாப் ஸ்டாரான நாகர்ஜுனாவின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அடியெடுத்து வைத்தார் நாக சைத்தன்யா. ஜோஷ், தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயா, மனம், பிரேமம் தெலுங்கு ரீமேக் படங்கள் மூலம், ரசிகர்களிடம் நன்றாகவே ரீச் ஆனார். அப்படியே சமந்தாவுடன் காதல், திருமணம், விவாகரத்து என இச்சம்பவங்களும், அவரை இன்னும் வைரலாக்கியது.

வெங்கட் பிரபுவுடன் கூட்டணி
இதுவரை தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த நாக சைத்தன்யா, முதன்முறையாக தமிழிலும் அறிமுகமாகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகிறது. ரொம்பவே முக்கியமாக இளையராஜாவும் யுவனும் சேர்ந்து, இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். இதனால், இன்னும் டைட்டில் கன்ஃபார்ம் ஆகாத இப்படத்திற்கு, பயங்கர எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

பாலிவுட்டில் மாஸ் என்ட்ரி
தெலுங்கில் மட்டுமே நடித்துவந்த நாக சைத்தன்யா, தமிழில் கமிட் ஆகும் முன்னரே, இந்தியில் ஒரு படம் முடித்துவிட்டார். அமீர் கான் ஹீரோவாக நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படத்தில், பலராஜூ என்ற ராணுவ அதிகாரியாக நாக சைத்தன்யா நடித்துள்ளார். இதுதான் இவருக்கு முதல் இந்தி படமாக இருந்தாலும், இதிலும் அவர் தெலுங்கு பேசுபவராகவே நடித்துள்ளாராம். இந்தப் படம் அடுத்த வாரம் 11ம் தேதி வெளியாகிறது.

நான் சென்னை பையன்ங்க
நாக சைத்தன்யா தற்போது ஐதராபாத்தில் இருந்தாலும், அவர் படித்ததெல்லாம் சென்னையில் தான். இந்நிலையில், 'லால் சிங் சத்தா' படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ள நாக சைத்தன்யா, "நான் சென்னையில் வளர்ந்து, ஐதராபாத்தில் குடியேறியதால் எனக்கு இந்தி தெரியாது" எனக் கூறியுள்ளார். மேலும், "இதற்கு முன்னும் இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால், அது எனக்கு கஃம்பர்ட்டாக இல்லை. அதனால், இந்தி படங்களில் நடிக்க விருப்பம் காட்டவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

நான் எப்போதுமே தென்னிந்தியன் தான்
"லால் சிங் சத்தா படத்தில் நடித்ததும் கூட, கதையின் படி நான் தெற்கில் இருந்து ராணுவத்தில் பணியாற்றுவதற்காக வடக்கே செல்லும் தென்னிந்தியப் பையனாக நடித்துள்ளேன். எனது கேரக்டரில் தென்னிந்தியாவின் டச்சிங் இருக்க வேண்டும் என்பதற்காகவே, என்னை அவர்கள் அழைத்ததாக" கூறியுள்ளார். இந்தியில் உருவான 'லால் சிங் சத்தா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலேயே, நாக சைத்தன்யா இப்படி பேசியது சர்ச்சையாகியுள்ளது.