நான் ஒரு பெண்சிங்கம்.. கர்ஜித்து என் குழந்தைகளை காப்பேன்.. அட்வைஸ் செய்பவர்களுக்கு வனிதா வார்னிங்!

சென்னை: இயற்கையிலேயே தான் ஒரு பெண் சிங்கம் என்றும் கர்ஜித் தன் குழந்தைகளை பாதுகாப்பேன் என்றும் நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Recommended Video

'என் வாழ்க்கை இனி சந்தோஷமா வாழ்ந்து காமிப்பேன்'

நடிகை வனிதா கடந்த 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே எளிமையாக அவர்களின் திருமணம் நடைபெற்றது.

இதில் அவர்களின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். அவரது திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

ஏமாந்துவிட்டாரா?

ஏமாந்துவிட்டாரா?

பீட்டர் பாலின் முதல் மனைவி தனது கணவர், தன்னை முறைப்படி விவாகரத்து செய்யாமல் வனிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். வனிதா ஏமாந்துவிட்டாரா என கருத்து தெரிவித்து வந்தனர்.

வேலைய பாருங்க

வேலைய பாருங்க

நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனும், வனிதா சட்டப்படி விவாகரத்து ஆகாத ஒருவரை எப்படி திருமணம் செய்தார் என கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் கடுப்பான வனிதா உங்க வேலைய மட்டும் பாருங்க. அடுத்தவர் குடும்ப விஷயங்களில் அவர்களின் அனுமதி இல்லாமல் பேசாதீர்கள் என்றும் இது உங்கள் டிவி நிகழ்ச்சி இல்லை என்றார்.

டிவிட்ஸ் நீக்கம்

டிவிட்ஸ் நீக்கம்

இதனை தொடர்ந்து பலரும் வனிதாவின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதித்தனர். ஊடகங்களும் மோதல் என செய்தி வெளியிட்டன. வனிதாவும் தொடர்ந்து சாடி வந்ததால், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தான் பதிவிட்ட டிவிட்டுகளை எல்லாம் நீக்கினார்.

மன்னித்துவிடுங்கள்

மன்னித்துவிடுங்கள்

அதோடு தான் அந்த விஷயத்தில் கருத்து சொல்லியிருக்கக்கூடாது என வனிதாவிடம் மன்னிப்பு கோரினார். ங்கள் சொன்னது போல், ஏழை குழந்தை பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் எழுப்புவதற்கான எனது அசல் ‘கடமையை'செய்வேன் என கும்பிடு போட்டு சென்றார்.

கவலைப்பட வேண்டாம்

கவலைப்பட வேண்டாம்

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில் அப்படி வெளியான செய்தி ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வனிதா, என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்பதை போல டிவிட்டியிருக்கிறார்.

பெண் சிங்கம்

பெண் சிங்கம்

அவர் டிவிட்டிருப்பதாவது, ஒரு தாயாக என் வாழ்க்கை மற்றும் திறனைப் பற்றி அக்கறை கொண்ட உங்கள் அனைவருக்கும்.. நான் இயற்கையிலேயே ஒரு பெண் சிங்கம், என் குழந்தைகளை கர்ஜித்து பாதுகாப்பேன்... என எச்சரிக்கும் வகையில் டிவிட்டியிருக்கிறார்.

தந்திரமான நரி

தந்திரமான நரி

ஆனால் அவரது இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை வாய்க்கு வந்தப்படி கழுவி ஊற்றியுள்ளனர். என்னது நீங்கள் பெண் சிங்கமா.. புலி தோள் போர்த்திய தந்திரமான நரி, உங்கள் சந்தோஷத்திற்காக மக்களை எப்படி சுரண்டுவது என்று உங்களுக்கு தெரியும் என விளாசியிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X