47வது பிறந்த நாள்.. யாராவது 'ஆன்டி'ன்னு டிரோல் பண்ணினால்.. முன்னாள் ஹீரோயின் சொல்றதை பாருங்க!

By

மும்பை: தனது 47 வது பிறந்த நாளை கொண்டாடும் பிரபல முன்னாள் ஹீரோயின், தன்னை ஆன்டி என ட்ரோல் செய்வது பற்றி கூறியுள்ளார்.

தமிழில், கமல்ஹாசனின் இந்தியன், சாணக்கியன் படங்களில் நடித்திருப்பவர், இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர்.

இவர், இந்தியில் சத்யா, ரங்கீலா, ஏக் ஹசீனா தீ, பூட் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில்
நடித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல்

இந்தி தவிர, தமிழ், மலையாளம், மராத்தி உட்பட பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். மும்பை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர், பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

சிவசேனாவில் இணைந்தார்

சிவசேனாவில் இணைந்தார்

கட்சிக்குள் தனக்கு எதிராக சிலர் செயல்பட்டதாகவும் அதனாலேயே தோற்றதாகவும் அப்போது கூறியிருந்தார். பின்னர், அந்தக் கட்சியில் இருந்து திடீரென விலகினார். கடந்த சில மாதங்களுக்கு முன் சிவசேனா கட்சியில் சேர்ந்தார். அவருக்கு அந்தக் கட்சி, சட்டமேலவை உறுப்பினர் வாய்ப்பை வழங்கியுள்ளது.

சிலர் முடக்கினர்

சிலர் முடக்கினர்

சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர் அவர். சமீபத்தில் அவருடைய இன்ஸ்டா கணக்கை மர்மநபர்கள் சிலர் முடக்கினர். பின்னர் அது மீட்கப்பட்டது. இந்நிலையில் தன் கணவர் மோஷின் அக்தர் மற்றும் அவர் குடும்பத்தினரை ட்ரோலர்கள் கடுமையாக தாக்கி வருவதாக அவர் வருத்தத்துடன் கூறியிருந்தார்.

புதிய அலுவலகம்

புதிய அலுவலகம்

இவர் இப்போது புதிய அலுவலகம் ஒன்றை வாங்கியுள்ளார். மும்பை கர் பகுதியில் அபார்ட்மென்ட் ஒன்றின் 6 வது மாடியில் இந்த அலுவலகத்தை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ. 3.75 கோடி. டிசம்பர் 28 ஆம் தேதி இதற்காகப் பத்திரப்பதிவு முடிந்ததாக மும்பை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பார்ட்டி வைப்பதில்லை

பார்ட்டி வைப்பதில்லை

இந்நிலையில் இவருக்கு இன்று 47 வது பிறந்த நாள். இதையடுத்து அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு செல்ல இருக்கும் நடிகை ஊர்மிளா, பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதில்லை என்றும் பார்ட்டி வைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 ட்ரோல் செய்தால்

ட்ரோல் செய்தால்

அவர் மேலும் கூறும்போது, 47 வயதை அடைவதை பெருமையாகவே நினைக்கிறேன். என்னை சிலர் ஆன்டி என்று ட்ரோல் செய்ய நினைத்தால், அவர்களுக்குத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். இதன் மூலம் என்னை யாரும் வருத்தமடைய செய்ய முடியாது. ஒவ்வொரு வருடமும் புதிய விஷயங்களை வாழ்க்கை கொண்டு வருகிறது. அதனால் அது சிறப்பு வாய்ந்தது' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X