நான் ஒரு விஐபி.. டிவிட்டரில் முழங்கிய சாண்டியின் முன்னாள் மனைவி காஜல்!
சென்னை: நடிகை காஜல் தான் ஒரு விஐபி என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான காஜல் நடன இயக்குநர் சாண்டியின் முன்னாள் மனைவி ஆவார். இவர் பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்றார்.
தற்போது அவரது முன்னாள் கணவரான சாண்டி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். நடிகை காஜல் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது டிவிட்டி வருகிறார்.

50000 ஃபோலோயர்
சினிமா சம்பந்தப்பட்ட பல விஷயங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிவிட்டரில் ஃபாலோ செய்து வருகின்றனர்.

நாட்டு நடப்பு
அவ்வப்போது ரசிகர்களின் உரையாடுவார் காஜல். ரசிகர்களின் கேள்விக்கும் அவர் பதிலளிப்பார். மேலும் நாட்டு நடப்புகளையும் தனது பக்கத்தில் ரீடிவிட் செய்து வருகிறார் காஜல்.

ஆக்டிவ் காஜல்
அவர் பதிவிடும் போஸ்ட்களை பலரும் லைக் செய்வார்கள். பிக்பாஸ் சீசன் 3 தொடங்கிய பிறகு டிவிட்டரில் மிகவும் ஆக்டிவாக உள்ளார் காஜல்.
முழு நேர வேலையா?
இந்நிலையில் காஜல் ஃபாலோயர்களில் ஒருவர் காஜல் டிவிட்டர் பயன்படுத்துவது பகுதி நேர வேலையா? இல்லை முழு நேர வேலையா?? எனகேட்டார்.
வேலை இல்லா பட்டதாரி
அதற்கு பதிலளித்த காஜல், ஐ அம் ஏ விஐபி.. உனக்கு தெரியுமா? வேலை இல்லா பட்டதாரி என பதிவிட்டு சிரிக்கும் இமோஜிகளையும் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications