twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் படத்தை நானும் எடுக்க போகிறேன்..கலைப்புலி தாணு அதிரடி

    |

    பொன்னியின் செல்வன் படக்கதை ஒரு அட்சய பாத்திரம் போலிருக்கிறது. பலரும் அதிலிருந்து எதையாவது எடுக்க முயல்கிறார்கள்.

    பொன்னியின் செல்வனை எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் எடுக்க முயன்று பின்னர் 70 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் எடுத்துள்ளார்.

    செப்.30 பொன்னியின் செல்வன் வெளியாகிறது. பொன்னியின் செல்வனை டிவி தொடராக ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா தாரித்து வருவதாக தகவல் உள்ள நிலையில் தாணுவும் தற்போது அறிவித்துள்ளார்.

    பொன்னியின் செல்வன் ரியல் கேரக்டர்கள் எப்படின்னு தெரியாதுன்னா இப்ப தெரிஞ்சுக்கோங்கபொன்னியின் செல்வன் ரியல் கேரக்டர்கள் எப்படின்னு தெரியாதுன்னா இப்ப தெரிஞ்சுக்கோங்க

     பொன்னியின் செல்வன் எனும் அட்சய பாத்திரக்கதை

    பொன்னியின் செல்வன் எனும் அட்சய பாத்திரக்கதை

    பொன்னியின் செல்வனை புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி கிருஷ்ண மூர்த்தி 1950 கள் முதல் 54 வரை தொடராக எழுதினார். அப்போது கல்கி வாசகர்களிடையே இது பெருத்த வரவேற்பை கொடுத்தது. அதில் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து ( ஒரு பவுன் தங்கம் அப்போது 100 ரூபாய் இருந்தால் பெரிய விஷயம்) உரிமத்தை வாங்கி படமாக எடுக்க முயன்றார். விபத்தில் சிக்கியதால் தள்ளிப்போன முயற்சி கைகூடவே இல்லை. அடுத்து முயன்றவர் அவரும் பெரிய ஆள் தான் உலக நாயகன் கமல் தான் அது. அவர் மணிரத்னத்தை இயக்குநராக போட்டு 1989 களில் முயன்றார் முடியாமல் போனது.

     இரண்டு முறை தோல்விக்குப்பின் 3 வது முறை சாதித்த மணிரத்னம்

    இரண்டு முறை தோல்விக்குப்பின் 3 வது முறை சாதித்த மணிரத்னம்

    பின்னர் மணிரத்னமே 2010 ஆம் ஆண்டு ஒரு முயற்சி எடுத்து முடியாமல் போய் தற்போதுதான் அது கைகூடியுள்ளது. நவீன வி.எஃப்.எக்ஸ் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல வசதிகள், எழுத்தாளர் ஜெயமோகனின் உழைப்பு போன்றவையும் மணிரத்னத்தின் டீம் எதையும் செய்யக்கூடியது என்பதாலும் அது சாத்தியமானது. ஐஸ்வர்யா ராய் 12 ஆண்டுகளுக்கு பின் ரீ எண்ட்ரி கொடுக்க படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் குறித்த எதிர்பார்ப்பு இப்போதே தொடங்கிவிட்டது. இப்படத்தின் ப்ரமோஷனுக்காக ஊர் ஊராக நடிகர்கள் இயக்குநர்கள் சென்று ரசிகர்களை சந்திக்கின்றனர்.

     ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவின் பொன்னியின் செல்வன் வெப் சீரீஸ்

    ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவின் பொன்னியின் செல்வன் வெப் சீரீஸ்

    பொன்னியின் செல்வனை மணிரத்னம் எடுக்கும்போதே ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவும் பொன்னியின் செல்வனை டிவி தொடராக தயாரிப்பதாகவும் வெகு காலமாக பேச்சு ஓடுகிறது. அவரும் பலமுறை தனது குழுவினருடன் பேட்டி கொடுத்துள்ளார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் செப் 30 வெளியாக உள்ள நிலையில் அதற்கு ஒருநாள் முன்பு தனுஷ் நடித்து செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் படம் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை தயாரித்திருப்பவர் கலைப்புலி தாணு. 1980 களிலேயே படத்தை வித்தியாசமாக ப்ரமோட் செய்து வெளியிடுவதில் வல்லவர் தாணு. அவரது படம் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறது.

    கலைப்புலி தாணு எடுக்கப்போகும் பொன்னியின் செல்வன்

    கலைப்புலி தாணு எடுக்கப்போகும் பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன் பார்ட் 1 செப்.30 வெளியாக உள்ள நிலையில் அடுத்து பார்ட் 2 வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பொன்னியின் செல்வனை தானும் எடுக்க உள்ளதாக நானே வருவேன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் தாணு தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியில் தான் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பேன் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு தனித்தனி கதை உண்டு என தன்னிடம் உள்ள புத்தகத்தை தாணு காண்பிக்கிறார். அதில் வந்திய தேவன் என எழுதி குதிரையில் போர் வீரன் செல்லும் காட்சி உள்ளது.

    (படம் உதவி பிஹைண்ட் வுட்ஸ்)

     எனது வந்திய தேவன் கேரக்டருக்கும் கார்திதான் - கலைப்புலி தாணு

    எனது வந்திய தேவன் கேரக்டருக்கும் கார்திதான் - கலைப்புலி தாணு

    ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு கதை உண்டுன்னு சொன்ன அவர் வந்திய தேவனை தொடவே முடியாது, என்னிடம் பெரிய ஆர்ட் வர்க்கே உள்ளது காட்டினால் மிரண்டு போவீர்கள் என்று சொன்னார். அப்படியானால் உங்கள் மனதில் வந்திய தேவனாக இருக்கும் ஹீரோ யார் என்று அவர் கேட்க கண்டிப்பா கார்த்திதான் அவர் வந்திய தேவனாக வந்த பின்னர் வேறு ஒருவரை நான் நினைத்து பார்க்கவில்லை என்று தாணு சொல்ல அப்படியானால் அதனுடைய தொடர்ச்சியாக இதுவும் போகுமா, லோகேஷ் கனகராஜ் உலகம் போல இது இன்னொரு உலகம் போல என்று செய்தியாளர் இது ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் பொன்னியின் செல்வன் படம் பல கதைகளாக வருகிறது என்று சொன்னார்.

    English summary
    Ponniyin Selvan story is like an Akshay pathra. Many try to take something out of it. MGR, Kamal and others failed tried to take Ponniyin selvan and Mani Ratnam took it after 70 years. Ponniyin Selvan is released on September 30. Thanu has now announced that He Wants to also produce a Ponniyin selvan movie. sountharya also process to produced Ponniyin selvan TV series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X