அப்போதும் சிங்கிள்.. இப்போதும் சிங்கிள்.. பிரேம்ஜி வருத்தம்!

சென்னை: அப்போதும் சிங்கிள் தான் இப்போதும் சிங்கிள் தான் என்று மீம்ஸ் போட்டுள்ளார் பிரேம்ஜி. வரும் 2020ம் ஆண்டாவது சிங்கிளாக இல்லாமல் திருமண வாழ்க்கையில் மிங்கிள் ஆக வேண்டும் என்று இவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரேம்ஜி அமரன் நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்டவர். பிரேம்ஜி கடைசியாக சிம்பா படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போது இசையமைப்பாளராக கவனம் செலுத்தி வரும் பிரேம்ஜி தன் அண்ணன் வெங்கட் பிரபு படமான பார்ட்டி படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

I am always single premji sad

இசையை தாண்டி அதிகபடியாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த பிரேம்ஜி பல படங்களில் காமெடியனாக நடித்து வந்தார். இவர் அதிகமாக வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து இருக்கிறார் மேலும் பிரேம்ஜி இல்லாமல் வெங்கட் பிரபு இயக்கும் முதல் படமும் பார்ட்டி தான் .

தற்போது இணையத்தில் ஸ்டார்ட் ஆப் தி டிகேட் மற்றும் என்ட் ஆப் தி டிகேட் என்று ஒரு செயல் சென்று கொண்டிருக்கிறது. அதாவது தன்னை பற்றி சொல்வது அல்லது எதோ ஒரு விசயத்தை பற்றி சொல்வது பத்து வருடத்திற்கு முன்பு இவ்வாறு ஆரம்பித்தது இப்போது இப்படி இருக்கிறது என்பதாகும் .

I am always single premji sad

இந்த டிரெண்டில் பிரேம்ஜியும் தனக்கான கருத்தை மீம்மாக வெளிபடுத்தி இருக்கிறார். அதில் சென்னை 28 படத்தின் முதல் பாகத்தில் நண்பர்கள் சந்தோஷமாக விளையாடும் புகைப்படத்தை போட்டு அதன் கீழ் சென்னை28-2வில் பிரேம்ஜி தனியாக நிற்கும் புகைப்படத்தை போட்டு தான் அப்போதும் சிங்கிள் தான் இப்போதும் சிங்கிள் தான் என்பது போல பதிவிட்டு இருக்கிறார் . மேலும் அந்த போட்டோவின் மேல் ஸ்டார்ட் மியூசிக் என்றும் பதிவேற்றி இருந்தார்.

வெங்கட் பிரபுவின் நண்பர்கள் குழுவில் நீண்ட நாட்களாக திருமணத்திற்காக காத்து கொண்டு இருப்பவர் பிரேம்ஜி. இவரின் திருமணத்தை சினிமாத்துறையே எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது என்று கூறலாம் .

I am always single premji sad

தற்போது பிரேம்ஜி சுரேஷ் சங்கையா அடுத்து இயக்க போகும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். பிரேம்ஜி 2015ல் வெளிவந்த மாங்கா படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். அந்த படம் தோல்வி படமாக அமைய அதற்கு பிறகு ஹீரோவாக நடிக்காத பிரேம்ஜி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் .

சுரேஷ் சங்கையா ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய இயக்குனர். ஒரு கிடாயின் கருணை மனு படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை பதிவு செய்த படம் ஆகும். இந்த படத்திற்கு பிறகு சுரேஷ் சங்கையா இயக்கும் படம் இது. இந்த படத்தை சூப்பர் டாக்கீஸ் சமீர் பரத் ராம் தயாரிக்கிறார் .

More from Filmibeat

Read more about: premji பிரேம்ஜி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X