For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான் - பிரேம்ஜி

  |
  நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான் பிரேம்ஜி பேச்சு- வீடியோ

  சென்னை: எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான் என்று ஜாம்பி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளரும் நடிகருமான பிரேம்ஜி கூறினார்.

  எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ஜாம்பி. இந்தப் படத்தில் யோகி பாபு, பிக்பாஸ் சீசன் 2 புகழ் யாஷிகா ஆனந்த், யூடியூபில் கலக்கி கொண்டிருக்கும் பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் சுதாகர், டி,.எம்.கார்த்திக், மனோபாலா, கோலமாவு கோகிலா புகழ் அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  ஜாம்பி படத்தை இயக்குவது ஆர்.புவன் நல்லான். இவர் ஏற்கனவே காமெடி கலந்த திகில் படத்தை இயக்கியவர். தற்போது அதே போல் திகில் கலந்த காமெடி படத்தை இயக்கி உள்ளார். இதில் ஜாம்பிக்களை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. மிருதன் படத்தை தொடர்ந்து ஜாம்பிகளைப் பற்றி தமிழில் வெளியாகும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அதில், யாஷிகா ஆனந்த் கிளுகிளு உடையிலும், யோகி பாபு பாவாடை கட்டிக்கொண்டும் ஜாம்பிக்களிடம் இருந்து தப்பி ஓடிவருவது போல் ட்ரெய்லர் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் யாஷிகா ஆனந்த் ஒரு கவர்ச்சி ஆட்டமும் ஆடியுள்ளார்.

  ஜாம்பி படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பது விஷ்ணு. பாடல்கள் எழுதியது கு,கார்த்திக், பாடல்களை பாடியது கரிஷ்மா, ஸ்வாகதா மற்றும் அந்தோனி தாஸ். சண்டைக்காட்சிகளை ஓம் பிரகாஷ் அமைத்துள்ளார். இந்தப் படத்தை வாங்கி வெளியிடுவது பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனமாகும். முக்கியமாக இந்தப் படத்திற்கு இசையமைத்து ஒரு பாடலையும் பாடியுள்ளர் நடிகர் பிரேம்ஜி.

  சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் விஷ்ணு விஷாலுடன் நடிக்கும் அமலா பால்? சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் விஷ்ணு விஷாலுடன் நடிக்கும் அமலா பால்?

  இசைக்காட்டேறி

  இசைக்காட்டேறி

  இந்தப் படத்திற்கு இதையமைத்திருப்பது பற்றி குறிப்பிட்ட பிரேம்ஜி, பேய் மாதிரி இசையமைத்துள்ளதால், என்னுடைய பெயரை இந்தப்படத்திற்காக இசைக் காட்டேரி என்று மாற்றிக்கொண்டேன் என்றார். அதே போல் நான், தி கேம் ஓவர் என பிரிண்ட் செய்த டி-சர்ட் போட்டிருந்ததைப் பார்த்த சில பேர் எனக்கு திருமணம் ஆகிவிட்டது என தப்புக்கணக்கு போட்டுவிட்டனர்.

  முரட்டு சிங்கிள்

  முரட்டு சிங்கிள்

  ஆனால் நான் என்றைக்குமே முரட்டு சிங்கிள் தான். அதை எல்லோருக்கும் தெரியப்படுத்தவே, இந்த முரட்டு சிங்கிள் என்று பிரிண்ட் செய்த டி-சர்ட்டை போட்டுக்கொண்டு வந்துள்ளேன் என்று காமெடியாக குறிப்பிட்டார்.

  பேய் மேக் அப்

  பேய் மேக் அப்

  நடிகை யாஷிகா ஆனந்த் பேசும்போது, ரொம்ப நாளைக்கு பிறது உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் தன் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு கோணத்திலும் கேமராவை வைத்து கஷ்டப்பட்டு உழைத்துள்ளார். அதேபோல் நடன இயக்குநரும் எனக்கேற்றவாறு தான் நடனம் அமைத்து கொடுத்துள்ளார். முக்கியமாக இந்தப் படத்தில் மேக்கப் போடுவதற்கே 3 மணி நேரம் ஆனது என்று கூறினார்.

  யோகிபாபு ஜாம்பி

  யோகிபாபு ஜாம்பி

  இந்தப்படத்தின் இயக்குநர் புவன் நல்லான் பேசும்போது, யோகி பாபு எனக்காகவே இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். அதேபோல் ஒரு நல்ல கூட்டணி அமைந்ததும் மகிழ்ச்சியான விஷயம். ஜாம்பி மாதிரியான ஒரு திகில் கலந்த காமெடி படத்தை எடுக்கும்போது, அதில் தொழில்நுட்பக் கலைஞர்களின் பணிதான் முக்கியமானது. அது இந்தப் படத்தில் எனக்கு நன்றாக அமைந்திருக்கிறது என்று மகிழ்ச்சியாக கூறினார்.

  யோகி பாபு வரலையே

  யோகி பாபு வரலையே

  ஜாம்பி படத்தின் தயாரிப்பாளர் வசந்த் பேசும்போது, யோகி பாபு தான் எங்களுக்கு மிக்க உறுதுணையாக இருந்தார். அவர் தற்போது தர்பார் படப்பிடிப்பில் உள்ளதால் வர முடியவில்லை. இந்தப் படத்தில் நடித்தவர்கள் அனைவருமே உழைப்பால் உயர்ந்தவர்களே என்று பேசினார்.

  English summary
  I'm not married yet. "I've always been a rogue single," said Premji, a composer and actor who spoke at the music and trailer launch of the Jambi film.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X