சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவன் நான்.. எனது நிலைப்பாடும் அதுவே.. அதிரடி காட்டிய விஜய் சேதுபதி!

சென்னை: சாதி மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Recommended Video

மனைவியுடன் வாக்களித்த Vijaysethupathi | TN Election 2021, Makkal Selvan VJS

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களின் வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர்.

பொது மக்களும் ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் பிரபலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வாக்களித்த விஜய் சேதுபதி

வாக்களித்த விஜய் சேதுபதி

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியும் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.

எனது நிலைப்பாடு..

எனது நிலைப்பாடு..

வாக்குப்பதிவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, தான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவன் தான் என்றும், அதுதான் தனது நிலைப்பாடு என்றும் கூறினார். மேலும் மனிதர்கள் தான் முக்கியம் என்றும் கூறினார்.

அவரிடம் கேளுங்கள்

அவரிடம் கேளுங்கள்

மேலும் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த விஜய் சேதுபதி நடிகர் விஜய் சைக்கிளில் வந்தது குறித்து அவரிடம் போய் கேளுங்கள் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று காட்டமாக கூறினார்.

46வது படம்

46வது படம்

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி தற்போது, மும்பைக்கர், காந்தி டாக்ஸ் ஆகிய இந்தி படங்களிலும் பொன்ராம் இயக்கத்தில் தனது 46வது படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X