ஊர்வசியோட மிகப்பெரிய ரசிகை நான்.. இயக்குனர் சுதா கொங்கரா!

சென்னை : துரோகி, இறுதிச்சுற்று, சூரரை போற்று என தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா

சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கை தற்போது இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சுதா கொங்கரா அதில் நான் நடிகை ஊர்வசியோட மிகப்பெரிய ரசிகை என பேசியுள்ளார்.

முதல் படம் வித்தியாசமான கதை

முதல் படம் வித்தியாசமான கதை

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பல ஆண்டுகள் பணியாற்றிய சுதா கொங்கரா துரோகி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். முதல் படம் வித்தியாசமான கதை களத்தை கையில் எடுத்து களமிறங்கிய சுதா கொங்கராவுக்கு துரோகி எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இந்த நிலையில் சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு இறுதிச்சுற்று படத்தை இயக்கினார்.

முரட்டுத்தனமான பாக்ஸிங் கோச்சர்

முரட்டுத்தனமான பாக்ஸிங் கோச்சர்

மாதவன் முரட்டுத்தனமான பாக்ஸிங் கோச்சராக நடித்த இறுதிச்சுற்று திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அதுவரை சாக்லேட் பாயாக இளம் பெண்களின் மனதை கொள்ளையடிக்கும் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த மாதவன் இறுதிச்சுற்றுவில் முரட்டுத்தனமான பாக்ஸிங் கோச்சர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது பார்க்கும் ரசிகர்களை வியப்படைய செய்தது. தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியான இறுதிச்சுற்று மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ரித்திகா சிங் லீட் ரோலில் நடித்து அறிமுகம் செய்யப்பட்டார்.

இந்தியில் ரீமேக்

இந்தியில் ரீமேக்

இறுதிச்சுற்று கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கிய படம் சூரரைப்போற்று. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருப்பார். இளம் நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பெரும் எதிர்பார்ப்பில் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வந்த சூரரைப்போற்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது. சூரரைப் போற்று கொடுத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தை இந்தியில் தற்போது ரீமேக் செய்து வருகிறார். அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்க இப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

ஊர்வசியோட மிகப்பெரிய ரசிகை

ஊர்வசியோட மிகப்பெரிய ரசிகை

இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக சிம்பு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சுதா கொங்கரா அதில் நடிகை ஊர்வசியோட மிகப்பெரிய ரசிகை நான் என பூரித்து கூறியுள்ளார். மேலும் துரோகி படத்திலேயே ஊர்வசியை நடிக்க வைக்க முயற்சித்துள்ளார் அப்பொழுது ஊர்வசி கர்ப்பமாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது இருப்பினும் அம்மா கதாபாத்திரத்திற்கு ஊர்வசி டப்பிங் கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து சூரரைப்போற்று படத்தில் ஊர்வசி சூர்யாவுக்கு அம்மாவாக எக்ஸ்ட்ராடினரியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X