பிகில் ஊதுற சத்தத்தை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்

சென்னை: பிகில் படத்தில் நான் கால்பந்து விளையாட்டு வீரராக நடித்துள்ளேன். இதனால், பிகில் பட வெளியீட்டுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று நடிகர் கதிர் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்கு எனக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படவில்லை. நான் தற்சமயம் நடிக்கும், ஜடா திரைப்படமும் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுவதால், பிகில் படத்தில் நடிக்க சிரமமாக இல்லை என்று செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கதிர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் கதிர் மிக முக்கியமானவர். இவர் இசையமைப்பாளர் ஜிவி.பிராகாஷ் தயாரிப்பில் உருவான, மதயானை கூட்டம் படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கதிர்.

I am eagerly waiting for Bigil Movie release - Actor Kathir

அதற்கு பிறகு கிருமி எனும் மிக முக்கிய படத்தில் நடித்தார். சமூகத்தில் தட்டிக்கேட்பவன் மட்டும் ஹீரோ அல்ல, விலகிப் போரவனும் ஹீரோதான் என்று அதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதைக் களத்தில் நடித்திருந்தார் கதிர்.

மதயானை கூட்டம் படத்தை இயக்கியவர் சுதர்சன். இப்படத்திற்கு கதை எழுதி இருந்தார் காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன். என்னோடு விளையாடு மற்றும் விக்ரம் வேதா படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த கதிர். அதற்கு பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேரும் பெருமாள் படத்தில் நடித்தார்.

இந்த படம் இவருக்கு மிகப் பெரிய பாராட்டை பெற்றுத் தந்தது. அது மட்டுமின்றி பல விருதுகளை இப்படம் வென்றது. அதற்கு பிறகு இவர் சிகை படத்தில் ஒரு ஒரினச் சேர்க்கையாளராக நடித்திருந்தார். அது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருந்தது.

இதன் பிறகு கதில் போலீஸாக நடித்து வெளிவந்த படம் தான் சத்ரு. இப்படத்தின் திரைக்கதை சுவாரஸ்யமானதாக இருந்தாலும், படம் வெகுஜன ரசிகர்களைக் கவரவில்லை. ஆனாலும் படத்தில் தன் நடிப்பை வெகு இயல்பாக பதிவு செய்திருந்தார்.

இப்படி தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி வரும் கதிர், பிகில் படத்தில் நடித்திருக்கிறார். பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய தளபதி விஜய், கதிர் ஒவ்வொரு படத்தையும் சரியாக அறுவடை பன்றாரு என பாராட்டி பேசியிருந்தார்.

தற்போது, கதிர் பிகில் படத்திற்காக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், முதலில் அட்லி கதிருக்கு கதை சொல்லி விட்டு, இரண்டு நாள் கழிச்சி பதில் சொல்லுங்கனு சொன்னாரு, ஆனா நான் உடனே பதில சொல்லிட்டேன்னு கதிர் சொல்லியிருக்காரு. விஜயுடன் நடித்த அனுபவம் மிக அருமையாக இருந்ததாகவும் தனக்கு சூட்டிங் இல்லாத நேரங்களிலும் போய் விஜய்யின் சண்டை காட்சிகள் படமாக்கப்படுவதை பார்த்து ரசித்ததாகவும் கூறியுள்ளார்.

இப்படத்தில் ராயப்பன் கதாபாத்திரத்துடன் நடிப்பது மட்டுமே சற்று பயமாக இருந்தது, என்று கூறினார். எனக்கு இந்த படத்தில் கால்பந்து வீரராக நடித்தது சிரமம் இல்லை என்றும், தான் நடிக்கும் ஜடா படமும் கால்பந்து விளையாட்டை மையமாய் வைத்து எடுக்கப்படுவதால், எனக்கு பிகிலில் நடிக்க எந்தவித சிரமமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார் கதிர். பிகலுக்காக வெறித்தனமாக தான் வெயிட் பன்றேன்னும் சொல்லியிருக்காரு கதிர் . கதிர் அடுத்ததாக ஜடா படத்தில் கால்பந்து வீரராக நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து சர்பத் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X