அஜித் சார் கூட ஒர்க் பண்ண ரொம்ப வருஷமா காத்துகிட்டு இருந்தேன்!

சென்னை : சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்

நானும் ரவுடிதான், தானாசேர்ந்தகூட்டம் என தொடர் வெற்றிகளை கொடுத்த இவர் இப்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விக்னேஷ் சிவன் அஜித் சார் கூட ஒர்க் பண்ண ரொம்ப வருசமா காத்துகிட்டு இருக்கேன் என கூறியுள்ளார்

காதலை வேறு கோணத்தில்

காதலை வேறு கோணத்தில்

பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். சிம்பு,வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்திருக்க காதலை வேறு கோணத்தில் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் காட்டியிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் ஓரளவுக்கு மட்டும்தான் வரவேற்ப்பை பெற்றது. விக்னேஷ் சிவன் வேலையில்லா பட்டதாரி படத்திலும் ஒரு சில காட்சிகளில் வந்து செல்வார்.

காமெடி டானாக

காமெடி டானாக

போடா போடியை தொடர்ந்து விக்னேஷ் சிவனுக்கு வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த இந்த படத்தில் விஜய் சேதுபதி காமெடி டானாக டோட்டலாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதேபோல நயன்தாராவும் இந்த படத்தில் காது கேட்காத பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார்.

விஜய்சேதுபதி,நயன்தாரா, விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான நானும் ரவுடி தான் தொடர்ந்து இப்போது மீண்டும் அதே கூட்டணி இணைந்துள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

காதல் படங்களையே மிகவும் வித்தியாசமாகவும் கவித்துவமாகவும் இப்போதுள்ள தலைமுறைக்கு பிடிக்கும் வகையிலும் இயக்கக் கூடிய மிக திறமைவாய்ந்த இயக்குனரான விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கோணக் காதலை மையமாக வைத்து உள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் சமந்தாவும் இணைந்துள்ளார். வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி காத்துவாக்குல ரெண்டு காதல் வெளியாக உள்ள நிலையில் விக்னேஷ் சிவனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியானது.

ரொம்ப வருஷமா காத்துகிட்டு இருந்தேன்

ரொம்ப வருஷமா காத்துகிட்டு இருந்தேன்

விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கும் திரைப்படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி இணையதளத்தில் கலக்கியது. இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விக்னேஷ் சிவன் அதில் பேசி உள்ளதாவது அஜித் குமார் உடன் பணியாற்ற பல வருடங்களாக காத்துகிட்டு இருந்தேன் இப்பொழுது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது ரொம்பவும் சந்தோசமாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X