Don't Miss!
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பூவே உனக்காக படத்தில் விஜய்யின் டெடிகேஷன் பார்த்து ஆச்சரியப்பட்டேன்!
சென்னை: நடிகர் விஜயின் திரை வாழ்க்கையில் முதல் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது பூவேஉனக்காக
விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்த படம் விஜய்க்கு குடும்ப ரசிகர்களை பெற்றுத் தந்தது
விஜய் பூவே உனக்காக படத்தில் நடிக்கும் போது இரவு பகல் பார்க்காமல் நடித்ததாக விக்ரமன் கூறியுள்ளார்.
ரொம்ப பயமா இருக்கு.. என்ன தளபதி 66 பட இயக்குநர் இப்படி சொல்லிட்டாரே.. எல்லா பீஸ்ட் பண்ண மாயமோ?

பூவே உனக்காக
இப்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது அந்த வகையில் மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள பீஸ்ட் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக விஜய் இருந்தாலும் ஆரம்ப காலத்தில் விஜய் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை இந்த நிலையில் விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படம் விஜய்யின் திரை வாழ்க்கையையே திருப்பிப் போட்டது.

ஃபேமிலி ஆடியன்ஸை
அது வரை சுமாரான வெற்றி படங்களை கொடுத்து வந்த விஜய்க்கு பூவேஉனக்காக மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு ஃபேமிலி ஆடியன்ஸையும் பூவே உனக்காக படம் தான் பெற்று தந்தது. விஜய்யுடன் இணைந்து நாகேஷ், நம்பியார்,சங்கீதா, சார்லி, மதன்பாப் எனது மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்து இருந்தனர்

மெச்சூரிட்டியான கதாபாத்திரத்தில்
எஸ் ஏ ராஜ்குமாரின் இசையில் வெளியான இந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. குடும்ப உறவுகளில் முக்கியத்துவத்தையும் உறவுகளுக்குள் உள்ள சிறு சிறு ஈகோ பிரச்சினைகளை தீர்த்து விட்டால் கூட்டுக்குடும்பம் என்ற அழகான கூட்டை அனைவரும் பாதுகாக்கலாம் என்பதை இரத்தின சுருக்கமாக பூவே உனக்காக படத்தில் இயக்குனர் விக்ரமன் கூறியிருப்பார். ஓதில் விஜய் மிகவும் மெச்சூரிட்டியான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அப்படி ஒரு டெடிகேஷன்
பூவே உனக்காக படத்திற்கு பிறகு விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டணி உருவானது இந்த நிலையில் இயக்குனர் விக்ரமன் பூவே உனக்காக படத்தில் விஜயுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். பூவே உனக்காக படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கும் தங்கியிருந்த ஹோட்டலுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டியது இருக்கும் அப்படி இருந்தும் விஜய் 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் 6.30 க்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் காஸ்ட்யூம் உடன் மேக்கப் போட்டுக்கொண்டு ரெடியாக இருப்பார் அப்படி ஒரு டெடிகேஷன் விஜயிடம் பார்த்த பிறகு நானும் படப்பிடிப்பு தளத்திற்கு உரிய நேரத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டேன் என விக்ரமன் விஜய்யுடன் பூவே உனக்காக படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.