பாத்திரம் கழுவிப் பாருங்க, புது அனுபவமாக இருக்கும்.. ஊரடங்கு நேரத்தில் மனைவிக்கு உதவும் இயக்குனர்!

By

சென்னை: இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனது மனைவிக்கு உதவி வருவதாக தெரிவித்துள்ளார் இந்த இயக்குனர்.

Recommended Video

Actor Soori Cleaning Bathroom | Lock Down

சீனாவின் உஹானில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது.

இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அமெரிக்காவிலும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகள்

உலக நாடுகள்

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ் இங்கிலாந்திலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒர்க் அவுட்

ஒர்க் அவுட்

பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதராம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சினிமா பிரபலங்கள் வீட்டில் இருந்தபடி, ஒர்க் அவுட் மற்றும் வீட்டுக்கு உதவியான வேலைகளை செய்து வருகின்றனர்.னாது பற்றிய வீட்டியோவை தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

மனைவிக்கு உதவி

மனைவிக்கு உதவி

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான கவுரவ் நாராயணன் தனது மகனுக்கு முடி வெட்டி அந்தப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன், வீட்டு வேலைகளில் தனது மனைவிக்கு உதவி வருவதாகத் தெரிவித்துள்ளார். இவர், இப்போது அருண் விஜய் நடிக்கும் சினம் படத்தை இயக்கி வருகிறார்.

ஹரிதாஸ்

ஹரிதாஸ்

இதற்கு முன், பிருத்விராஜ், பிரியாமணி, சக்தி உட்பட பலர் நடித்த, நினைத்தாலே இனிக்கும், பரத், ரீமா கல்லிங்கல் நடித்த யுவன் யுவதி, கிஷோர், சினேகா நடித்த ஹரிதாஸ், விக்ரம் பிரபு நடித்த வாஹா படங்களை இயக்கியவர். அவர் கூறும்போது, 'கொரோனா கொஞ்சம் கொடுமையான தொற்றுநோய். அதனால்தான் அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

தீவிரம் தெரியாமல்

தீவிரம் தெரியாமல்

ஆனால், பொதுமக்களில் சிலர் இந்த நோய் தொற்றின் தீவிரம் தெரியாமல் வெளியில் அலைந்து கொண்டிருக்கின்றனர். அரசு எவ்வளவு அறிவுறுத்தி யும் இப்படி வெளியில் சுற்றிக் கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். அதுதான் இப்போது முக்கியம்.

அடுத்தப்பட ஸ்கிரிப்ட்

அடுத்தப்பட ஸ்கிரிப்ட்

சினம் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. இந்த ஊரடங்கு நாட்களை எனது அடுத்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைக்குப் பயன்படுத்தி கொள்கிறேன். இடையே என் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்கிறேன். பாத்திரங்கள் கழுவிக் கொடுக்கிறேன். இது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X