விஜய் 68-வது படத்தை நான் தான் இயக்கப் போகிறேன்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை : ஊர் பெயர்களில் படத்தின் டைட்டிலை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு
விஜய்க்கு அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மாஸ் நடிகர் ஆக்கியவர்
விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைய காத்துக் கொண்டிருக்கும் பேரரசு விஜய் 68 படத்தை இயக்க போவதாக நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

ஊர்களின் பெயர்களை டைட்டிலாக
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அந்த வகையில் இயக்குனர் பேரரசு தன்னுடைய படங்களில் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான ஊர்களின் பெயர்களை டைட்டிலாக வைத்து வருகிறார். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி என்ற மெகா ஹிட் வெற்றி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பேரரசு.

திருப்பாச்சி
விஜய்யுடன் இணைந்த பேரரசுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான திருப்பாச்சி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது மாபெரும் வெற்றிப்படமாக அந்த ஆண்டு அமைந்தது.

ஆக்ஷன் கொஞ்சம் தூக்கலாக
திருப்பாச்சி வெற்றியைத் தொடர்ந்து உடனடியாக பேரரசு மற்றும் விஜய் இரண்டாவது முறையாக இணைந்த படம் சிவகாசி. இந்த முறை ஆக்ஷன் கொஞ்சம் தூக்கலாக கமர்சியல் பார்முலாவில் வெளியான சிவகாசி திரைப்படம் வசூலிலும் சக்கை போடு போட்டது. விஜய்யை தொடர்ந்து அஜித்துடன் கூட்டணி வைத்த பேரரசு திருப்பதி என டைட்டிலில் வைத்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை ஆனால் கமர்சியல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முற்றிலும் செம ஸ்டைலில் அஜித் இந்த படத்தில் கலக்கியிருப்பார்

மலையாளத்தில் சாம்ராஜ்யம்
திருப்பதிக்கு பிறகு தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை, திருத்தணி, உள்ளிட்ட படங்களை இயக்கினார். தமிழில் நீண்ட வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த பேரரசு மலையாளத்தில் சாம்ராஜ்யம் என்ற படத்தையும் இயக்கி மலையாளத்திலும் அறிமுகமானார்.

விஜய் 68-வது படம்
அடுத்த படம் கட்டாயமாக விஜய் உடன் இணைந்து தான் என பேரரசு தீவிர முயற்சியில் அடிக்கடி விஜய்யை சந்தித்து கதையைக் கூறி வருகிறார். பேரரசு கூறிய கதை விஜய்க்கு பிடித்த விட்டதாகவும் விரைவிலேயே இருவரும் இணைந்து புதிய படத்தில் பணியாற்ற உள்ளதாகவும் பேரரசு கூறிவரும் நிலையில் இந்த படம் விஜய்யின் 68-வது இருக்கக்கூடும் என பேரரசு நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். பேரரசு,விஜய் கூட்டணியில் வெளியான திருப்பாச்சி, சிவகாசி கமர்சியல் பார்முலாவில் இருந்தது இப்பொழுது ட்ரெண்ட் முற்றிலுமாக மாறி உள்ளதால் அதற்கு தகுந்தார்போல் புதிய கதையை தயார் செய்துள்ளதாக பேரரசு கூறியுள்ளார். எனவே விரைவிலேயே மற்றுமொரு பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











