நான் ஒரு இந்து, என்னை 'ஜோசப் விவேக்' என்று அழைக்கலாம்: கோலிவுட் பிரபலம் அதிரடி #Mersal
Recommended Video

சென்னை: நான் ஒரு இந்து, என்னை ஜோசப் விவேக் என்று அழைக்கலாம் என பாடல் ஆசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.
மெர்சல் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. பாஜகவினர் பிரச்சனை செய்ய செய்ய படத்திற்கு சூப்பராக விளம்பரம் கிடைத்து ஹிட் இல்லை சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
மெர்சல் குழு பாஜகவுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும்.

ஜோசப் விஜய்
பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தேவையில்லாமல் விஜய்யை ஜோசப் விஜய் என்று கூறி மதத்தை இழுத்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் உள்பட யாருக்குமே சுத்தமாக பிடிக்கவில்லை.
கசக்கும்
உண்மையை சொன்னால் கசக்கத் தான் செய்யும் என்று கூறி விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டை புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ராஜா.
விவேக்
மதப் பெயரை குறிப்பிட்டால் எங்களை பிரிக்கலாம் என்று நினைத்தால் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு இந்து என்னை ஜோசப் விவேக் என்று அழைக்கலாம் என பாடல் ஆசிரியர் விவேக் ட்வீட்டியுள்ளார்.
மதம்
ஜோசப் விஜய்
விஷ்ணு விஜய்
முகம்மது விஜய்
எதுவாக இருந்தாலும் எங்களுக்கு விஜய் அண்ணா பிடிக்கும். தமிழகத்தில் மதம் அல்லது சாதி விதையை விதைக்க முயற்சிக்காதீர்கள். நாங்க வேற மாதிரி என்று ரசிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











