என்னை அப்படி நினைச்சிடாதீங்க..நான் ஒன்னும் அந்த மாதிரி பெண் இல்லை..சொல்கிறார் பிரபல ஹீரோயின்!

By

மும்பை: நான் அந்த மாதிரியான நடிகை அல்லை, சாகசங்களை நிஜமாகவே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் பிரபல நடிகை.

தமிழில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர் அடா சர்மா.

சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

சவாலானது

சவாலானது

தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ள இவர், இந்தியில் 1920, பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது, மேன் டு மேன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் பெண்ணாக இருந்து அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய கேரக்டரில் நடிக்கிறார். ஆணாக நடிப்பதற்கு சில பயிற்சிகளை எடுத்துள்ளார் அடா சர்மா.

பெண்ணாக மாறியவர்

பெண்ணாக மாறியவர்

அந்தப் படம் பற்றி பேசும்போது, இது ரொமான்டிக் காமெடி படம். ஒருவர், ஒரு பெண்ணை விரட்டி விரட்டிக் காதலிக்கிறார். பிறகு திருமணம் செய்துகொள்கிறார். பிறகுதான் தெரிகிறது, அந்தப் பெண், ஆணாக இருந்து ஆபரேஷன் மூலம் பெண்ணாக மாறியவர் என்று. இதனால் நடக்கும் பிரச்னைகளும் குழப்பங்களும்தான் கதை. அபிர் சென்குப்தா இயக்குகிறார்' என்று தெரிவித்திருந்தார்.

போலீஸ் அதிகாரி

போலீஸ் அதிகாரி

இந்நிலையில், நான் சாகசங்களைச் செய்கிற பெண் என்று தெரிவித்துள்ளார் அடா சர்மா. அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியில் என் முதல் படம் 1920. முதல் படத்திலேயே கருப்பு பற்களுடன் கோரமாகவும், அலங்கோலமான முடியுடனும் கொடூரமாக அலறியபடியும் நடித்தேன். இதுபோன்ற ரிஸ்க்கான சவால்கள் எனக்குப் பிடிக்கும். அதை விரும்புகிறேன்.

பாவனா ரெட்டி

பாவனா ரெட்டி

'காமாண்டோ 2' படத்தில் வித்யூத் ஜாம்வாலுடன் நடித்தேன். இது ஆக்‌ஷன் படம். நான் பாவனா ரெட்டி என்ற கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக நடித்தேன். அதில் எனக்கு சாதாரணமான கேரக்டர் அல்ல. தெலுங்கு ஸ்டைலில் இந்தி மொழியை பேசி நடிக்க வேண்டும். இது எனக்கு சவாலாக ஒன்று. அதை சரியாகவே செய்தேன்.

போராடுகிறேன்

போராடுகிறேன்

அதற்காகக் கடுமையாகப் பயிற்சி பெற்றேன். கமாண்டோ 3 படத்திலும் அந்த கேரக்டரை தொடர்ந்தேன். ஆக்‌ஷன் படங்களில் தொடர்ந்து நடிக்க, நிறைய விஷயங்கள் வேண்டும். என்னிடம் அது இருக்கிறது. நான் துன்பத்தில் இருக்கும் பெண் அல்ல. உண்மையில் எதிர்த்து போராடுகிறேன். எல்லா சாகசங்களையும் நிஜமாகவே செய்கிறேன்.

நிரூபித்திருக்கிறேன்

நிரூபித்திருக்கிறேன்

அதனால் ஆக்‌ஷன் படங்களில் நடிப்பது நன்றாக இருக்கிறது. ஒரே கேரக்டரில் நடித்தாலும் ஆக்‌ஷனிலும் நடிப்பிலும் என்னால் வித்தியாசத்தை காண்பிக்க முடியும். இதை, நான் நடித்துள்ள படங்களில் நிரூபித்திருக்கிறேன். அடுத்து நடிக்க இருக்கிற மேன் டு மேன் படமும் எனக்கு சவாலானதுதான். இவ்வாறு கூறி உள்ளார் அடா சர்மா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X