twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் பாலாவின் உதவி இயக்குனர் கிடையாது.. அவருக்கு நான் தங்கை... சுதா கொங்கரா!

    |

    சென்னை: இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது பாலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார்

    இறுதிசுற்றுக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று ஹிந்தியில் இயக்கி வருகிறார்

    இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய சுதா கொங்கரா இயக்குனர் பாலாவுக்கு நான் உதவி இயக்குனராக இருந்ததில்லை அவருக்கு நான் தங்கை என கூறியுள்ளார்.

    கனவிலும் நினைத்ததில்லை.. உன்னி கிருஷ்ணன் எதுக்காக இப்படி சொல்லியிருக்காருன்னு பாருங்க! கனவிலும் நினைத்ததில்லை.. உன்னி கிருஷ்ணன் எதுக்காக இப்படி சொல்லியிருக்காருன்னு பாருங்க!

    மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக

    மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக

    தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இயக்குனராக இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்துள்ள இயக்குனர் சுதா கொங்கரா துரோகி படத்தின் மூலம் அறிமுகமானார். இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பல ஆண்டுகள் பணியாற்றிய இவருக்கு முதல் படம் துரோகி எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்பதால் சிறிது காலம் எடுத்துக் கொண்டு மாதவன் இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தை இயக்கினார்.

    பாக்ஸிங் கோச்சராக

    பாக்ஸிங் கோச்சராக

    அதுவரை நடிகர் மாதவனை ரசிகர்கள் சாக்லேட் பாயாக ரசித்து வந்த நிலையில் இறுதிச்சுற்று படத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் முரட்டுத்தனமான வேடத்தில் காட்டியிருப்பார் இறுதிச்சுற்று படத்தில் மாதவன் பாக்ஸிங் கோச்சராக பிரமாதப் படுத்தியிருப்பார். இந்த படத்தில் நடிகை ரித்திகா சிங் நடித்து அறிமுகம் செய்யப்பட்டார் தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியான இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது

    பொம்மி கதாபாத்திரத்தை பெரிதும் கொண்டாடினார்கள்

    பொம்மி கதாபாத்திரத்தை பெரிதும் கொண்டாடினார்கள்

    இறுதிச்சுற்று வெற்றியை கண்டு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக இயக்கிய திரைப்படம் சூரரை போற்று. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மிகப் பிரம்மாண்டமான கதை களத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருப்பவர். அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்து கலக்கி இருப்பார். சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி போட்டி போட்டு நடித்திருந்தது பார்க்கும் அனைவரையும் ரசிக்கவைத்தது. தான் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஹீரோவுக்கு இணையாக ஹீரோயின் கதாபாத்திரங்களையும் வடிவமைத்து வரும் சுதா கொங்கரா சூரரைப்போற்று படத்திலும் அதே போல ஹீரோவுக்கு இணையாக அபர்ணா பாலமுரளியின் பொம்மி கதாபாத்திரத்தையும் மிக ஸ்ட்ராங்காக காட்டியிருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் ரசிகர்கள் பொம்மி கதாபாத்திரத்தை பெரிதும் கொண்டாடினார்கள்

    பாலாவின் உதவி இயக்குனர் கிடையாது

    பாலாவின் உதவி இயக்குனர் கிடையாது

    அடுத்ததாக சிம்பு அல்லது அஜித்துடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார் இந்தி நடிகர் அக்ஷய்குமார் இந்த படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார். ஹிந்தி ரசிகர்களுக்கு தகுந்தது போல சில மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் உள்ள தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய சுதா கொங்கரா நான் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்ததில்லை. பாலாவுக்கும் எனக்கும் இடையேயான உறவு அண்ணன் தங்கை உறவு என்ன க் கூறியுள்ளார்.

    English summary
    I am not assistant director of bala, but a sister of him says sudha kongara
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X