என் இயக்கத்தில் விஜய் நடிக்கவில்லை.. கன்பர்ம் செய்தார் கெளதம் மேனன்

By Sudha

Gautham Menon and Vijay
சென்னை: நடிகர் விஜய், அடுத்து இயக்குநர் விஜய்யின் படத்தில் நடிக்கப் போகிறார். எனது படத்தில் அவர் இல்லை. எனது அடுத்த படம் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவேன் என்று இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன் கூறி விட்டார். இதன் மூலம் அவரது யோஹன் அத்தியாயம் ஒன்று கைவிடப்படுவது உறுதியாகி விட்டது.

பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்திய படம்தான் இந்த யோஹன் அத்தியாயம் ஒன்று. துப்பறியும் கதையான இதை கெளதம் மேனன் இயக்க, விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்படத்தைத் தொடங்கும் அறிகுறியே தெரியவில்லை.

விஜய் முருகதாஸின் துப்பாக்கி படத்தில் பிசியாக இருந்து வந்தார். மேனனும், இசைஞானி இளையராஜாவின் நீதானே பொன்வசந்தம் படத்தில் படு பிசியாக இருந்து வந்தார். தற்போது இந்த இரு படங்களும் முடிந்து விட்டன. இதனால் யோஹன் படத்தை மேனன் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் அந்தப் படம் கைவிடப்படுவதாக கெளதம் மேனன் சமீபத்தில் சூசகமாக தெரிவித்திருந்தார். தற்போது அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நான் விஜய் படத்தை இயக்கவில்லை. விஜய்யின் அடுத்த படத்தை ஏ.எல். விஜய் இயக்குவார். எனது அடுத்த படம் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார் மேனன். மேலும் யோஹன் அத்தியாயம் ஒன்று இப்போதைக்கு இல்லை என்றும் கூறி விட்டார் மேனன்.

ஏற்கனவே இப்படித்தான் அஜீத்துடன் சேருவதாக இருந்தார் மேனன். ஆனால் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது விஜய்யுடனும் நெருங்கி வந்து பின்னர் அது டிராப் ஆகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X