Just In
- 6 hrs ago
முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு
- 7 hrs ago
விஜய் டி.வி அழகிக்கு திருமண நாள்.. குவிந்த வாழ்த்துகள்!
- 8 hrs ago
நித்தியானந்தாவின் தனி நாட்டுக்கு பிரதமராகும் தமிழ் நடிகை? பரபரக்கும் கைலாசா!
- 8 hrs ago
அடேங்கப்பா... சாதித்தது ரவுடி பேபி: இந்திய அளவில் பர்ஸ்ட், உலகளவில் 7-வது இடம்!
Don't Miss!
- News
இந்திய நீதித்துறையில் முதல்முறை.... அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு
- Finance
827 பங்குகள் விலை ஏற்றம்..! 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..!
- Automobiles
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
- Sports
இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- Technology
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Lifestyle
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்
சென்னை : தமிழில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தனது இன்னிசை குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் பாடகர் ஹரிஹரன். இவரது பாடல்களைக் கேட்டு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஒரு பொய்யாவது சொல் கண்ணே போன்ற பல வெற்றிப் பாடல்களை பாடிய பெருமை இவருக்கு உண்டு. 2004 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் இரண்டு தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் 500 பாடல் மேல் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் கூட 200 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்
நெடுநாட்களுக்குப் பிறகு சென்னை திரும்பியுள்ள பாடகர் ஹரிஹரன் அவர்கள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் படியாக இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த இசை நிகழ்ச்சியை சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சியில் வரும் வருமானம் அனைத்தும் புற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கான செலவிடப்படும் என கூறியுள்ளார். உலகில் மருந்துகளைவிட நோய்கள் தான் அதிகம் காணப்படுகிறது அதிலும் மிகவும் கொடியது புற்றுநோய் என கருதுவதாக கூறினார். இந்த இசை நிகழ்ச்சி ஒரு நல்ல காரியத்துக்காக செய்வதாகவும் இதனை அனைவரும் எந்த தயக்கமுமின்றி முன்வந்து அவர்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்
ட்ரென்ட்டாகும் கமல் 60.. உங்கள் நான்.. திக்குமுக்காடும் டிவிட்டர்! #Kamal60 #UngalNaan
இந்த கொடிய நோயால் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டிருந்தார். குழந்தைகள் மட்டுமல்ல இவ்வுலகில் பிறந்த எவரும் பெரிதாக கஷ்டப்பட கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தார். எங்களது உழைப்புக்கு பலன் கிடைக்கும் என நம்புகிறோம் நாங்கள் சரியான வழியில் தான் செல்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.

வி.எஸ் மருத்துவமனை புற்றுநோய்க்கு சிறந்த சேவையை பண்ணி கொண்டிருப்பதாகவும் கூறினார். நீங்கள் அனைவரும் கூட முன்வந்து என்ன தயக்கம் இன்றி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கேட்டுக்கொண்டார்.
இந்த இசை நிகழ்ச்சியில் அவரது பெரும்பாலான சூப்பர் ஹிட் பாடல்கள் இந்த இசை நிகழ்ச்சியில் இடம்பெறும் என குறிப்பிட்டிருந்தார். நான் இந்த இடத்தில் இருப்பதற்கு மிகவும் சந்தோஷம் அடைவதாகவும் இந்த காரியத்தை செய்வதற்கு மிகவும் பெருமைப்படுவதாக கூறினார். அனைத்தையும் கடவுள் சக்தி தான் தீர்மானிக்கிறது என்று கூறினார். இளையராஜா ஏ ஆர் ரகுமான் போன்ற பெரும் இசை அமைப்பாளர்கள் தான் நான் இந்த இடத்தை அடைந்தேன் என்றும் குறிப்பிட்டு கூறினார்.

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தானி வருவாயா என்ற பாடல் இன்று வரை ஹரிஹரன் எந்த மேடையில் பாடினாலும் மெய்சிலிர்க்கும் . அது போலே மீண்டும் ஹரி அவர்கள் பல பல இசை சிந்தனைகளுடன் விண்ணை தாண்டி தமிழ் ரசிகர்களுக்கு மீண்டும் வர வேண்டும் என்பது தான் அனைவரது ஆசையும்.