நான் ஏன் கவுண்டமணியை காப்பியடிக்கனும், வடிவேலுவை போட்டியா நினைக்கனும்... சந்தானம்
சென்னை: நான் கவுண்மணியை காப்பியெல்லாம் அடிக்கவில்லை. அதேபோல வடிவேலுவை போட்டியாகவும் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார் காமெடியன் சந்தானம்.

டிவியிலிருந்து சினி்மாவுக்கு வந்த சந்தானம்
ஆரம்பத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபாவில் கலக்கிக் கொண்டிருந்தவர்தான் சந்தானம். அதில் கிடைத்த பாப்புலாரிட்டி மற்றும் சிம்பு உள்ளிட்டோரின் நட்பு காரணமாக சினிமாவுக்கு வந்து விட்டார்.

குறுகிய காலத்தில் நிறைய கிச்சுகிச்சு மூட்டியவர்
சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் சந்தானம். மேலும் இளம் ஹீரோக்களுடன் நட்பாகப் பழகியதால் அவருக்கு இளம் நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கவுண்டமணியை காப்பியடித்து...
ஆனால் கவுண்டமணியை அப்டியே காப்பியடித்து நடிக்கிறார் சந்தானம் என்பது அவர் மீதான நீண்ட நாள் குற்றச்சாட்டாகும். அதற்கேற்ப அவரது பல படங்களைப் பார்த்தவர்களுக்கு கவுண்டமணி டைப் காட்சியா இருக்கே என்று தோன்றவும் செய்தது.

அப்படியெல்லாம் இல்லை பாஸ்..
ஆனால் சந்தானம் இதை மறுக்கிறார். நான் யதார்த்தமாக நடிக்கிறேன். கவுண்டமணியை காப்பி அடிக்கவில்லை. குடும்பங்களிலும் கல்லூரிகளிலும் என்னைப்போல் ஒரு பையன் இருப்பான். அவர்களில் ஒருவன் சந்தானம் என்ற நடிகராக தெரிகிறேன்.

கவுண்டர் செந்திலை மட்டும்தான் அடிப்பார்
நான் கவுண்டமணிபோல் நடிக்கிறேன் என்கிறார்கள். செந்திலை கவுண்டமணி அடிப்பார். வாடா போடா என்றும் பேசுவார். நான் ஒருத்தரை மட்டுமன்றி எல்லோரையும் அதுபோல் பேசுகிறேன். அதனால் கவுண்டமணி மாதிரி நடிப்பதாக பேசுகிறார்கள். ஆனால் நான் காப்பி அடிக்கவில்லை.

யாருமே நிரந்தரம் இல்லைங்க
சினிமாவில் யாரும் நிரந்தரம் இல்லை. காமெடியில் நடிக்க எனக்கு பிறகும் ஒருத்தன் வருவான்.

வடிவேலுவுக்கு நான் போட்டி அல்ல
நடிகர் வடிவேலுவுக்கு நான் போட்டி என்று நான் கருதவில்லை. நான் நிச்சயம் போட்டி அல்ல. யாரும் யாருக்கும் போட்டி கிடையாது என்று கூறுகிறார் சந்தானம்.


Click it and Unblock the Notifications











