யார் என்ன சொன்னாலும் நம்பாதீங்க.. நான் ‘அதுக்கெல்லாம்’ சரிப்பட்டு வரமாட்டேன்: யோகிபாபு

தான் ஹீரோவாக நடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் நடிகர் யோகிபாபு.

Recommended Video

இது காமெடி மூஞ்சி, நான் ஹீரோ இல்ல - யோகி பாபு வேதனை பேச்சு- வீடியோ

சென்னை: புதிய படமொன்றில் தான் ஹீரோவாக நடிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் காமெடி நடிகர் யோகிபாபு.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் யோகிபாபு. 'கோலாமாவு கோகிலா' பட வெற்றி மூலம் இன்னும் பிஸியாகி விட்டார். இப்படத்தில் இடம் பெற்ற, 'எனக்கு கல்யாண வயசுதான் வந்துருச்சுடி' பாடல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கி விட்டது.

இந்நிலையில் வடிவேலு, சந்தானம் என காமெடி நடிகர்கள் ஹீரோவாக புரோமோசன் ஆனதைப் போல், இவரும் புதிய படமொன்றில் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியானது. சமூகவலைதளங்களிலும் இந்தச் செய்தி வைரலானது.

மறுப்பு வீடியோ:

மறுப்பு வீடியோ:

ஆனால் இத்தகவலை மறுத்துள்ளார் யோகிபாபு. இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "எல்லோருக்கும் வணக்கம். நான் யோகிபாபு பேசறேன். கடந்த சில நாட்களாக, ‘நான் ஹீரோவாகத் தான் நடிப்பேன். காமெடியனாக நடிக்க மாட்டேன் எனச் சிலர் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஹீரோலாம் இல்லை:

ஹீரோலாம் இல்லை:

நான் ஹீரோலாம் இல்ல. ஹீரோவாக பண்ணும் அளவிற்கு இது முகமும் கிடையாது. தகுதியும் கிடையாது. தயாரிப்பாளரை நஷ்டப்படுத்திவிடக் கூடாது. அதனால் வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன்.

சாம் ஆண்டன் படம்:

சாம் ஆண்டன் படம்:

‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு' உள்ளிட்ட படங்களை இயக்கிய சாம் ஆண்டன் என்னிடம் ஒரு கதை சொன்னார். ஒரு நாய் மற்றும் ஒரு வெளிநாட்டுக்காரர், இவர்களை வைத்து தான் அந்தக் கதை. அவர்கள் வழி மாறி வந்து என்னிடம் மாட்டிக் கொள்கின்றனர்.

காமெடி தான்:

காமெடி தான்:

நார்மலா எப்போதும் போல காமெடி கேரக்டரில் தான் இப்படத்திலும் நடிக்கிறேன். மெயின்லீடு அந்த வெளிநாட்டுப் பெண்மணி மற்றும் நாய் தான். நான் ஒரு கூர்க்கா கேரக்டரில் நடிக்கிறேன். அவ்வளவு தான்.

ஹீரோ வாய்ப்பு:

ஹீரோ வாய்ப்பு:

ஏற்கனவே ஒரு சில இயக்குநர்கள் என்னை ஹீரோவாக நடிக்க அணுகினார்கள். நான் மறுத்துவிட்டேன். இப்போது அவர்களெல்லாம் நாங்கள் சொல்லி நீங்கள் ஏன் நடிக்கவில்லை என்ற அளவிற்கு நினைக்கிறார்கள்.

காமெடியன் தான்:

காமெடியன் தான்:

சத்தியமாகச் சொல்கிறேன். இது ஹீரோ முகமெல்லாம் இல்லை. அதேபோல் பாலாஜி மோகன் படத்திலும் லீடு ரோல் வேறு. நான் காமெடி கேரக்டரில் தான் நடிக்கிறேன். யார் என்ன சொன்னாலும் நம்பாதீங்க. நான் கடைசி வரை காமெடி தான் பண்ணுவேன். காமெடியனாகவே என்னைப் பாருங்கள்" என அந்த வீடியோவில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X